கொரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்த தொடங்கியிருக்கும் முதல் நாடு

உலகம் முழுவதுமே கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தி வருகிறது. சில நாடுகளில் பரவல் குறைந்தாலும், பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை வீசி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 79 லட்சத்து 39 ஆயிரத்து 148 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 70 லட்சத்து 23 ஆயிரத்து 742 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 50 ஆயிரத்து 267 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,92,36,139 பேர்.

கொரோனா தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க ஒரே தீர்வு எனும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதன்படி, அமெரிக்காவின் ஃபைசர் எனும் கொரோனா தடுப்பு மருந்து 95 சதவிகிதத்திற்கு அதிக பலனைத் தருவதாகச் சொல்லப்பட்டது.

ஃபைசர் தடுப்பூசியை பிரிட்டன் நாட்டில் பொதுமக்களுக்கு அளிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று இப்போது பிரிட்டனில் தொடங்கி விட்டது.

90 வயதான மார்க்கெரட் க்ளன் எனும் மூதாட்டிக்கு முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஃபைசர் பயோடெக் நிறுவனம் தங்கள் தடுப்பூசியை இந்தியாவில் அவசரப் பயன்பாட்டுக்கு உபயோகிக்க அனுமதி அளிக்க கோரியுள்ளது. அதேபோல பாரத் நிறுவனமும் இந்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here