பிரெஸ்மாவின் 16ஆம் ஆண்டு பொதுக்கூட்டம்

நாட்டில் தற்போது நிலவி வரும் கோவிட்-19 தொற்றின் காரணமாக தவிர்க்க முடியாத காரணத்தினால் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்களின் சங்கத்தின் 16ஆம்  ஆண்டுக்கூட்டம் வரும் 30.12.2020 புதன்கிழமை பிற்பகல் 3 மணி தொடங்கி 5 மணி வரை zoom வழி நடைபெறும்.

நம்முடைய ஆண்டுக் கூட்டத்தை zoom வழி நடத்த அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. நமது கூட்டத்தில் 250 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்படும் என்று தலைவர்  டத்தோ ஹாஜி ஜவ்ஹர் அலி தய்யூப்கான் தெரிவித்தார்.

அதனால் கீழ்காணும் அகப்பக்கத்தில் https://forms.gle/662NSW7wY7NTuHITA. பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேல் விவரங்களுக்கு 03-40448786 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here