வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது – கவிஞர் வைரமுத்து

கொரோனாவுக்கு சரியான மருந்து கண்டறியும்வரை பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் திறக்காமலிருப்பதே உகந்தது என்று வைரமுத்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடியில், 150-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்திலும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவுக்கு சரியான மருந்து கண்டறியும்வரை வகுப்பறைகள் திறக்காமலிருப்பதே உகந்தது என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் 

கல்வி நிலையங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவக் கண்மணிகள் நலம்பெற விழைகிறேன். சரியான மருந்து கண்டறியப்படும்வரை அல்லது கொரோனா நம்மைக் கடந்தொழியும் காலம்வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே உகந்தது. இது உரியவர்களின் உரிய நடவடிக்கைக்காக- எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here