இந்திய மக்களுக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசி

முதல்கட்ட சோதனை முடிவில் கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டியது தெரிய வந்துள்ளது. மேலும் எந்தவித கடுமையான பாதக நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவில்லை. முதலாம் கட்ட சோதனைகளின் இடைக்கால முடிவுகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.

இரண்டு வார இடைவெளியில், வெவ்வேறு அளவுகளில் கொடுக்கப்பட்ட திட்டமிடப்பட்ட தடுப்பூசி, உடலில் நடுநிலையான ஆன்டிபாடியை தூண்டியது. சிலருக்கு ஊசி போட்ட இடத்தில் வலி உண்டானது. அது தன்னிச்சையாக தீர்க்கப்பட்டது. பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தடுப்பூசியை 2 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஜூலை 30 ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்ட ஒரு நோயாளிக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தலைவலி ஏற்பட்டது. இது முதலில் கடுமையான பாதகமான நிகழ்வு என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், பின்னர் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சோதனைகள் முழு தரவின் பகுப்பாய்வு முடிந்த பின்னரே இறுதி ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் சுகாதார நிபுணர்களின் குழு அவசரகாலத்திற்கு கோவாக்சினை பயன்படுத்துவதற்கு முன்பு தடுப்பூசி செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து கூடுதல் தரவு தேவை என்று கூறியது.

தடுப்பூசி செயல்திறன் தரவு என்பது மருத்துவ பரிசோதனைகளின் மூன்று கட்டங்களின் முடிவுகளின் ஒருங்கிணைந்த பகுப்பாய்வின் விளைவாகும். ஒரு கட்டத்தின் முடிவுகளை வைத்து ( மருந்தின் செயல்திறனை மதிப்பீடு செய்ய முடியாது. இதற்கு இன்னும் விரிவான மூன்று கட்ட சோதனைகள் தேவை.

கோவாக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளில் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 25,800 தன்னார்வலர்களுடன் உள்ளனர். அரசாங்க தரவுகளின்படி, முதலாம் கட்ட சோதனைகளில் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட 375 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here