ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கி வருகிறது. இதனிடையே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறந்த ஆலோசனைகளை வழங்கி அதை செயல்படுத்தும் இளம் தொழில் அதிபர்களுக்கு ‘புவியின் இளம் சாதனையாளர்கள்’ என்ற விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த வகையில், இந்த ஆண்டுக்காகன சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு இந்திய தொழிலதிபர் வித்யுத் மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றம் ஹரியானாவில் விவசாயிகள் விவசாய கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு வித்யுத் மோகன் தீர்வு கண்டுள்ளார்.
அதாவது, விவசாயிகளிடமிருந்து வைக்கோல் உமி தேங்காய் ஓடுகள் ஆகியவற்றை வாங்கி கரி தயாரித்து வருகிறார். இதனால் விவசாயிகளுக்கு வருமானமும், காற்று மாசும் குறைந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் விருதுக்கு இந்திய தொழிலதிபர் வித்யுத் மோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.