சென்னை கல்லூரி மாணவர்கள் 210 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை-

சென்னையில் 15 மண்டலங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 15 மண்டலங்களில் 6 ஆயிரத்து 344 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

6 ஆயிரத்து 344 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 13- ஆவது மண்டலத்தில் 200 பேருக்கும், 11- ஆவது மண்டலத்தில் 5 பேருக்கும், 15ஆவது மண்டலத்தில் 3 பேருக்கும், 12,  14- ஆவது மண்டலங்களில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 210 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்க்கிறது.

பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 6 ஆயிரத்து 344 பேரில், 3 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், 2 ஆயிரத்து 361 பேருக்கு பரிசோதனை முடிவு பெறப்படவில்லை என்றும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here