3 நூற்றாண்டுகளுக்குப் பிறகு’ வானில் நிகழவிருக்கும் அதிசயம்!

சூரிய குடும்பத்தில் இருக்கும் மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் நாளை நேர்கோட்டில் சந்திக்கவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை போலவே பல கோள்கள் இருப்பதாகவும், அவை ஒரே இடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக சுழன்று வருவதாகவும் பல ஆண்டுகளாக கூறப்படும் செய்தி தான்.

சூரியக் குடும்பத்தில் மொத்தம் 9 கோள்கள் இருந்தாலும், நம்மால் எந்த கோள்களையும் பார்க்க முடிவதில்லை. ஒரு கோள், மற்றொரு கோளை நேர்க்கோட்டில் சந்திப்பது போன்ற அதிசயம் நிகழ்ந்தால் தான் நாம் கண்ணுக்கு அது புலப்படும். அது போன்ற ஒரு நிகழ்வு தான்  நடக்கவிருக்கிறது.

சுமார் 397 வருடங்களுக்கு பிறகு வியாழன், சனி கோள்கள் நேர்க்கோட்டில் சந்திக்கவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு கோள்களும் கடந்த 1623 ஆம் ஆண்டு நேர்க்கோட்டில் சந்தித்ததாகவும் அதன் பிறகு இன்று தான் சந்திக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே நேர்க்கோட்டில் என்பது சுமார் 735 மில்லியன் கி.மீ தூர இடைவெளியில் நிகழவிருக்கிறதாம். சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு இந்தியாவின் பல நகரங்களில் கோள்கள் தென்படும் என்றும் இதோடு 2080  ஆம் ஆண்டு தான் மீண்டும் நடக்கும் என்றும் பிர்லா கோளரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here