4 லட்சம் ரூபாய் டிப்ஸ் -ஆனந்த கண்ணீரில் மூழ்கிய ஊழியர்கள்

அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சாப்பிடச்சென்ற பெண்மணி ஒருவர், சாப்பிட்டு முடித்ததும் ஊழியர்களுக்கு 5,600 டாலர் டிப்ஸ் கொடுத்துச் சென்றுள்ளார். இந்தியப் பணத்தில்  இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய்.

இவ்வளவு பெரிய தொகையை டிப்ஸாக கொடுத்ததால் ஓட்டல் ஊழியர்கள் ஆனந்த கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

அந்த ஓட்டலில் உள்ள 28 ஊழியர்களும் ஆளுக்கு 200 டாலர் வீதம் பிரித்து எடுத்துச்சென்றுள்ளனர்.

கொரோனா கொடுங்காலம் அமெரிக்காவை ரொம்பவே ஆட்டிப்படைத்துவிட்டது. இதனால் உணவகங்கள் மூடப்பட்டதோடு, தொழிலாளர்கள் வேலை இழந்து நின்ற நிலையில், தற்போது மீண்டும் உணவகங்கள் திறக்கப்பட்டு ஊழியர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது.

இந்த சூழலை உணர்ந்த அந்த பெண்மணி, ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை டிப்ஸ் ஆக கொடுத்த சென்றதால், அந்த பெண்மணியின் மனிதாபிமானத்தை தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார் அந்த ஓட்டலின் உரிமையாளர் சல்லூக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here