தைப்பே-
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக அந்நாட்டில் மொத்தமாக இதுவரை 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 12- ஆம் தேதிக்கு பின்னர் அந்நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு குறைந்ததையடுத்து கட்டுப்பாடுகளுடன் வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதன்படி, தைவான் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் கடந்த 12- ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து தைவான் வந்தது.
அந்த விமானத்தில் நியூசிலாந்து, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 2 பேர் விமானிகளாக பணியாற்றிவந்தனர். இதற்கிடையில், அந்த விமானத்தில் பணியாற்றிவந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த விமானி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் விமான பயணத்தின்போது முகக்கவசம் உள்பட எந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை.
ஆனால், தைவான் வந்தடைந்த பின்னரும் நியூசிலாந்து விமானி தனக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கும் தகவலை அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார்.
இந்நிலையில், தைவானில் உள்நாட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் நேற்றுமுன் தினம் உறுதி செய்தனர்.
அப்போது, அந்தப் பெண் தைவான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றிவந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த விமானியை சமீபத்தில் சந்தித்தது தெரியவந்தது.
இதையடுத்து, நியூசிலாந்து விமானியிடன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதில் அமெரிக்காவில் இருந்து வரும்போதே கொரோனா அறிகுறிகள் இருந்ததையும், அதை தைவான் விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் அந்த விமானி மறைத்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு நடைமுறைகளை மீறியதாகவும், நிறுவனத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவிதத்தில் நடந்துகொண்டதற்காவும் நியூசிலாந்து விமானியை தைவான் ஏர்லைன்ஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்தது.