சீன அரசு பெண் பத்திரிக்கையாளருக்கு அதிரடி தண்டனை !

சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில், வுஹானிலிருந்து கொரோனா வைரஸ் தொடர்பான தகவலை வெளியிட்டதாக ஜாங் ஜான் என்னும் பெண் பத்திரிக்கையாளர் மீது சீன அரசு நான்கு பத்திரிகையாளர்களை கைது செய்தது.

அதில் முதல் விசாரணை இன்று ஜாங் ஜான் முதலில் எதிர்கொண்டார். அப்போது கொரோனா பரவிய ஆரம்ப காலகட்டத்தில் வைரஸ் தொற்றுக்களை அறிக்கை செய்த விதம் சிக்கலைத் தூண்டியது எனவும், பிப்ரவரி மாதத்தில் அவரது நேரடி அறிக்கைகள்,  கட்டுரைகள் சமூக ஊடகth தளங்களில் பகிரப்பட்டன. இது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.

எம்எம்எஸ், வீடியோ, வீசாட், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக ஜான் தனது செய்திகளைப் பரப்பினார் என தெரிவித்துள்ளனர்.

சீன அரசாங்கத்திற்கு எதிராக தவறான தகவல்களை, அதாவது ‘மக்களுக்கு அரசாங்கம் போதுமான தகவல்களை வழங்கவில்லை, பின்னர் ஊரடங்கை அமல் படுத்தியது. இது ஒரு பெரிய மனித உரிமை மீறல்’ என எழுதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் இந்த 37 வயதான ஜாங்கின் உடல்நலம் பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தற்போது அவர்  நாசி குழாய் வழியாக கட்டாயமாக உணவு உட்கொள்ளவைக்கப்படுகிறார் என அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான செய்திகளைப் பத்திரிகையாளர் ஜாங் ஜான் பேட்டியாகக் கொடுத்தார் என்றும் அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்தது.

இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு, தற்போது ஷாங்காய்
புடாங் புதிய மாவட்ட மக்கள் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here