6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதி

புது டில்லி:-
பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர், ஹைதராபாத்தைச் சேர்ந்த 2 பேர், புனேவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிதீவிர கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உருமாறிய அதிதீவிர கொரோனா உறுதி செய்யப்பட்ட ஆறு பேரும் தனித்தனி அறைகளில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிதீவிர கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஆறு பேருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட அதிதீவிர கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து, பிரிட்டனிலிருந்து நவம்பர் 25- ஆம் தேதி முதல் டிசம்பர் 23 வரை இந்தியா திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 6 பேருக்கு அதிதீவிர கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here