புதிய யுக்தியில் வலிமை புகைப்படம்

ஒரு படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டு, ரிலீஸ் தேதியையும் உறுதி செய்த பிறகே அடுத்த படத்தைத் தேர்ந்தெடுக்கும் பழக்கம் கொண்டவர் தல அஜித் குமார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக வலிமை திரைப்படத்தில் அஜித் குமாருடன் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.
RX 100 திரைப்படத்தின் நாயகன் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் யுவன் இசையில் பாடல் கோர்ப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.  இந்தப் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமைக்கான விற்பனை சமீபத்தில் தொடங்கியிருக்கிறது.
அதில், பெரும் விலைக்கு யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது எனவும், முந்தைய படங்களின் விலைகளைவிட அதிக விற்பனை நடந்திருக்கிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அஜித் ரசிகர்கள் திரைப்படத்தின் ஏதாவது ஓர் அப்டேட் இணை அவரே வெளியிடுமாறு கேட்டு வந்த நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தனது திரை குடும்பத்தினருடன் அஜித்குமார் நிற்பது போன்ற ஒரு புகைப்படமானது வெளியாகி இருக்கிறது.
இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here