விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.
இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இடைவெளியின் போது திரையரங்கில் தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் கர்ணன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட போவதாக கர்ணன் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை மிகவும் குஷியடைய செய்துள்ளது .