சாலையில் குழி – மற்றொரு ஆடவர் பலி

பெட்டாலிங் ஜெயா: திங்கள்கிழமை (ஜன. 4) குழி மீது மோதியதில் மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சாலை விபத்தில் இறந்தார்.

முத்தியாரா டாமான்சாரா அருகே மதியம் 1.15 மணிக்கு விபத்து நடந்தது. உணவு விநியோகஸ்தரான அவர்  ஜாலான் பி.ஜே.யூ 7/2 உடன் போக்குவரத்து விளக்கு சமிஞ்சை அருகே இச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

31 வயதான அவர் சாலையில் ஒரு குழி மீது மோதியதில் அவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து பின்னர் அவர் சாலையின் இடது பக்கத்தில் விழுந்தார். அவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

கோவிட் -19 பரிசோதனையின் முடிவுகளுக்குப் பிறகு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என்று பெட்டாலிங் ஜெயா ஒ.சி.பி.டி உதவி ஆணையர் நிக் எசானி முகமட் பைசல் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது. வீடியோவில், மற்ற வாகனமோட்டிகள் சாலையின் ஓரத்தில் நகராத மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு உதவ முயற்சிப்பதைக் காண முடியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3), மிட் வேலி அருகே இதேபோன்ற விபத்து 75 வயதுடைய ஒருவரின் மரணத்திற்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here