ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு!

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் ரசிகர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் என்று கூறியிருந்த ரஜினிகாந்த் அதிலிருந்து பின்வாங்கி அரசியலில் இருந்து விலகியுள்ளார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் அரசியலுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் ரசிகர்கள், மக்களிடம் அவர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். பலரும் அவர் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்டனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், நம் மக்கள் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து சிலர் வரும் 30ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் தெரியவருகிறது.

அக்கூட்டத்தில் நம் மாவட்டத்தை சார்ந்த மாவட்ட பகுதி, வட்ட பிற அணி மற்றும் நம் மக்கள் தலைவரின் உண்மையான காவலர்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது. மீறி கலந்து கொள்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here