தொடக்கக் கல்வி தமிழ்ப்பள்ளியில்தான் தொடங்க வேண்டும்!

பிள்ளைகளின் தொடக்கக் கல்வியை தமிழ்ப்பள்ளியிலேயே கற்பதை உறுதி செய்துக்கொள்ள
வேண்டுமாய் பெற்றோர்களை முன்னாள் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தசாமி  பெருமாள் கேட்டுக்கொண்டார்.

ஐந்து, அல்லது ஆறு வயது பிள்ளைகள் வீட்டில் இருந்தால் தயவுசெய்து அருகில் இருக்கும்
தமிழ்ப்பள்ளியிலுள்ள பாலர் பள்ளியில் அவர்களை பதிவு செய்யுங்கள். ஒரு வேளை
.

நம்முடைய இனம் மொழி உள்ள கலை கலாச்சாரம் இந்நாட்டில் தொடர்ந்து மேலோங்கி நிற்க
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாக இருக்கவேண்டும்.

ஆகவே பிள்ளைகளின்
தொடக்கக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியிலேயே கற்பதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள
வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாடு பல துறைகளில் மேம்பாடும் வளர்ச்சி பெற்று வரும் இக்காலக்கட்டத்தில்
தமிழ்ப்பள்ளிகளின் தரமும் குறைந்துள்ளதாக யாரும் கூறிவிட முடியாது. ஒரு முறை,

தமிழ்ப்பள்ளிகளின் அழிவுக்கு தமிழர்களே காரணமாகிவிடக்கூடாது என்று கூறு உள்ள முண்னாள்  தலைமையாசிரியர் கோவிந்தசாமி பெருமாள் 1972 ஆம் ஆண்டு தற்காலிக
ஆசிரியராக பணியில் இணைந்து 1973 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை
ஆசிரியராகப் பணியாற்றத்தொடங்கியவர். இவர் 1995 ஆம் ஆண்டு முதல் கூலிம் பாகான் செனா தோட்டத் தமிழ்ப்பள்ளி,
ஹென்றிட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி என இறுதியாக கூலிம்
தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து 2007 ஆம் ஆண்டு பணி ஓய்வு
பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here