தமிழ்ப்பள்ளிகள் நிலைபெற செய்ய வேண்டியது இணைப்பா? இடமாற்றமா?

கவின்மலர்.

பகுதி-1

தொடக்க காலம்,உந்து காலம்,பரவுகாலம்,உருமாற்ற காலம் என்று அக்காலப் பகுப்பிற்குப் பெயரிடப்பட்டுள்ளது.இதில் முதல் மூன்று காலங்கள் முடிந்துபோன காலங்களாகும்.ஆனால் உருமாற்ற காலம் என்பது 2009 தொடங்கி 2016 வரையிலுமான தமிழ்ப்பள்ளிகளின் பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.204ஆம் ஆண்டைக் கடந்த 205ஆம் ஆண்டில் கால் பதிக்கவுள்ள மலேசியத் தமிழ்ப்பள்ளி வரலாற்றின் முக்கிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.கடந்த 200 ஆண்டுகால வரலாறு நான்கு கால கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

 • இனி வரும் மாற்றங்கள் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுகின்றன

அக்கால கட்டத்தில்தான் தமிழ்ப்பள்ளிகள் பல மாற்றங்களையும்  ஏற்றங்களையும் பெற்றன.அதன் பின்னர் வந்துள்ள இனி வரவுள்ள காலங்களில் நிகழவுள்ள மாற்றங்கள் நம்மைச் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டும் மாற்றங்களாகும். குறிப்பாக 2017ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு 2018ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் வகுப்பறைகளை இணைக்கும் திட்டம் அனைத்து மொழிப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில நமது தமிழ்ப்பள்ளிகளும் பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டன.நாட்டில் 30 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களுடன் செயல்படும் 127 தமிழ்ப்பள்ளிகளில் முதல் கட்டமாக ஏறத்தாழ 35 தமிழ்ப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 • மருத்துவமனையின் சிறப்பு கண்காணிப்புப் பிரிவும் வகுப்புகளின் இணைப்புத் திட்டமும்

இத்திட்டம் மருத்துவமனையின் சிறப்பு கண்காணிப்புப் பிரிவில் ( ICU )சேர்க்கப்பட்டது போல் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பிவிட முடியும். 30 மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது் அவை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட முடியும்.ஆனால் தற்போது பரிசீலனையில் இருக்கும் பள்ளிகளின் இணைப்புத் திட்டம் அப்படி அல்ல. அது மீண்டும் திரும்ப முடியாத நெடும்பயணம் போன்றது. ஒரு முறை போனால் போனதுதான். மீண்டும் வராது. அப்படித்தான் கடந்த காலங்களில் நாடு விடுதலைப் பெற்ற போது 888 தமிழ்ப்பள்ளிகளாக இருந்த நாட்டின் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை இணைப்பின் காரணமாகவும் இயற்கை மரணம் காரணமாகவும் 524 வரை குறைந்தது. டத்தோஶ்ரீ நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளின் காரணமாக இன்றைய எண்ணிக்கை 527ஆகவுள்ளது.

 • குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை இணைக்கும் கள ஆய்வு தொடங்கிவிட்டது

இந்நிலையில் கல்வி அமைச்சு 30 மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள அதாவது ஒவ்வொரு வகுப்பிலும் ஒன்று முதல் ஐந்து மாணவர்கள் வரையுள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு அவை ஐந்து கிலோ மீட்டர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்குமானால் அவற்றை ஒன்றிணைக்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருகிறது.அதற்கான கள ஆய்வுப் பணிகளை மாவட்ட கல்வி இலாகாகளின் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்.இணைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.அத்தகைய இணைப்புத் திட்டத்திற்கு சம்பந்தப்பட்டப் பள்ளியின் பெற்றோரில் 100 விழுக்காட்டினரின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது முக்கிய விதிகளில் ஒன்றாக இருப்பினும் சூழ்நிலைகளின் காரணமாக அவற்றை இணைப்பதைத் தவிர்க்க இயலாமல் போகலாம். அவ்வகையில் நாட்டின் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 127 தமிழ்ப்பள்ளிகள் 30 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களுடன் செயல்படுகின்றன என்று ஒரு புள்ளி விபரம் காட்டகிறது. அவற்றில் 28 தமிழ்ப்பள்ளிகள் 10 மாணவர்களுக்கும் குறைவாக செயல்படுகின்றன.

 • தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததற்கும் குறைவதற்குமான காரணங்கள்

தமிழ்ப்பள்ளிகளே நமது தேர்வு என்ற பரப்புரை ஒரு புறம் வெற்றியளித்துக் கொண்டிருந்தாலும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததற்கும் குறைவதற்கும் என்ன காரணம்.?குறிப்பாக பட்டணப் புறப் பள்ளிகளில் தமிழ்ப்பள்ளிகளே நமது தேர்வு என்ற பரப்புரையின் தாக்கத்தால் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவதற்கு என்ன காரணம். பல்வேறு காரணங்களி தலையாய காரணங்களை மட்டும் பார்ப்போம்.

 • பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் அமைந்திருக்கும் இடங்களில் தற்போது தமி்ழ் மக்கள் அதிகமாக வாழவில்லை.( புலம் பெயர்ந்து பட்டணங்களிலும் குடியிருபபுப் பகுதிகளிலும் குடியேறிவிட்டனர்)

 

 • தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் தமிழ்ப்பள்ளிகள் இல்லை.

 

 • தமிழ்ப்பள்ளிகள் மீது பல பெற்றோர்களுக்கு நம்பிக்கை இல்லை ( மலாய் சீனப்பள்ளிகளில் பயிலும் 51 விழுக்காட்டு இந்திய மாணவர்களே அதற்குச் சான்று )

 

 • அரசுக்கு புதிய தமிழ்ப்கள்ளிகளை உருவாக்கும் திட்டம் இல்லாமை

 

 • .குறை சொல்லவும், அருகிலுள்ள பிற மொழி பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பவும் தெரிந்த இந்தியர்களுக்குத் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் ஒரு தமிழ்ப்பள்ளி கேட்டு குரல் கொடுக்கவும் செயல்படவும் தெரியவில்லை.

 

 • பள்ளியின் தலைமையாசிரியர்கள்,ஆசிரியர்களின் செயல்திறன் இன்மை,தவறான அணுகுமுறைகளின் காரணமாக வெறுப்படையும் பெற்றோர் பிற மொழிப்பள்ளிகளுக்கு தங்கள் பிளைளகளை அனுப்புவது அதற்குச் சான்று

 

 • இந்தியர்களின் மக்கள் தொகையும், பிறப்பு விகிதமும் குறைந்திருப்பதை ஒரு துணை காரணமாகக் கொள்ளலாம்.

( பிறப்பு விகிதம் அதிகரித்தாலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கே அனுப்புவர் என்பதில் உறுதியில்லை என்பதால் இவ்வாறு கூறிக்கப்பெறுகிறது)

 

இத்தகைய காரணங்களால் மட்டுமல்லாமல் வேறு பல காரணங்களால்  தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.மாணவர்கள் எண்ணிக்கைகளின் காரணமாகவே தமிழ்ப்பள்ளிகள் இணைப்புத் திட்டத்தில் பாதிக்கப்படலாம். காலப்போக்கில், இயற்கை மரணத்தாலும் பாதிக்கப்படலாம் என்ற ஆபத்து நம் கண் முன்னால் தெரிந்திருந்தும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு பதிலாக ஆளுக்காக குறை கூறிக் கொள்வதிலும் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்வதிலுமே பலரும் முனைப்புடன் இருக்கிறார்களே தவிர நல்ல தீர்வுகளை தோக்கிச் சிந்திப்பதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு நமது நகர்வுகள் மிக மெத்தனமாகவும் மெதுவாகவும் இருக்கின்றன.எனவே தீர்வை நோக்கி சிந்திப்பதும் செயல்படுவதுமே நமது முக்கிய பணிகளாக இருந்திட வேண்டும்.அதற்கு முன் வகுப்புகளை இணைக்கும் அரசாங்கத்தின் முதல் திட்டத்தால் வரும் பாதிப்புகள் என்ன என்று பார்ப்போம்.

 • வகுப்புகளை இணைக்கும் திட்டத்தின் பாதிப்புகள் 

கல்வி அமைச்சைப் பொறுத்தமட்டில் ஒரு வகுப்பில் குறைந்தது 15 மாணவர்கள் இருக்க வேண்டும் என்பது அடிப்படை எண்ணிக்கையாகும்.தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒரு வகுப்பில் 14 மாணவர்களுக்கும் குறைவாகவே பதிவுகள் இருக்குமானால் அது முழுமை பெற்ற வகுப்பாக கருதப்படாது என்பதுதான் இதன் உண்மை நிலவரமாகும்.எனவே 5 மாணவர்களுக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளை இணைத்து கல்வி அமைச்சசு பன்மை வகுப்புகளை உருவாக்கியது.

 

இத்தகை திட்டம் தற்போது புதிய முயற்சியாக கருதப்பட்டாலும் பிரிட்டிஷார் ஆட்சியிலும் பின்னர் சுதந்திர மலேசியாவிலும்  60ஆம் ஆண்டுகளிலிருந்து 80ஆம் ஆண்டுகள் வரை இத்தகைய வகுப்புகள் நடத்தப்பட்டதுண்டு. இத்திட்டத்தின் கீழ் ஒன்றாம் இரண்டாம் ஆண்டு அல்லது ஒன்று முதல் மூன்று வரைவுள்ள வகுப்புகளையும்,நான்கு முதல் ஆறு வரையுள்ள வகுப்புகளையும் இணைத்து பன்மை வகுப்புகள் உருவகாகப்படும்.சுருங்கச் சொன்னால் இரு வகுப்புகளையோ,மூன்று வகுப்புகளையோ இணைத்து இப்பன்மை வகுப்புகள் உருவாக்கப்பட்டு செயல்பட்டதுண்டு. நடப்பிலுள்ள வகுபுபகள் இணைப்புத் திட்டத்தில் ஒன்றாம் ஆண்டும்,ஆறாம் ஆண்டும் தனித்து இயங்க, வாய்ப்பளிக்கப்படுகிறது.இரண்டாம் மூன்றாம் ஆண்டுகள் இணைத்து ஒரு வகுப்பாகவும்,நான்காம் ஐந்தாம் ஆண்டுகள் இணைத்து ஒரு வகுப்பாகவும் நடத்தப்படுகின்றன.இதன் காரணமாக முன்பு 6 வகுப்புகளுடன் செயல்பட்ட பள்ளிகள் தற்போது 4 வகுப்புகளுடன் நடைபெறுகின்றன.இத்தகைய சூழல்களால் வகுப்புகளை இணைத்து பன்மை வகுப்புகளை நடத்துவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பார்ப்போம்

 

 • ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும் இதனால் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் சேர்க்கப்படும் பயிற்சி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும்.

 

 • ஆசிரியர்களின் போதனைத் திறன் குறையும். ஒரு குறிப்பிட்டப் பாடத்தை அதிகபடி நேரம் மூன்று பாட நேரம் வரை ஒரு ஆசிரியர் போதிக்க அனுமதியுண்டு.என்றாலும் இரு வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களைக் குறிப்பாக கணிதம்,அறிவியல் போன்ற திறப்பாடங்களைப் போதிக்கும் போது பாடங்களின் திறன்களை நிறைவாகப் போதிப்பதில் ஆசிரியர்கள் இடர்களை எதிர்கொள்வர்..

 

 • ஆசிரியர்களின் பணிச்சுமை மேலும் அதிகமாகும்.மொழிப்பாடங்களிலும் நான்காம் ஆண்டில் படிக்க வேண்டிய திறனை மூன்றாம் ஆண்டு மாணவனும் படித்துக்கொள்வதால் அவன் நான்காம் ஆண்டிற்குச் செல்லும் போது ஆர்வம் குன்றி பாடத்தில் சலிப்புத்தட்டலாம்.

 

 • நான்காம் ஆண்டு மாணவனை விட மூன்றாம் ஆண்டு மாணவனின் திறன் சிறப்பாக இருக்குமானால் மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும்

 

 • ஆசிரியர்களின் மன அழுத்தம் அதிகமாகும்.தற்போது வகுப்பு ஒன்றுக்கு 1.5 ஆசிரியர்கள் என்ற கல்வி அமைச்சின் கணக்கின்படி ஆறு வகுப்புகளைக் கொண்ட ஒரு பள்ளிக்கு 9 வகுப்பாசிரியர்களும்,ஒரு தலைமையாசிரியர் ஒரு குறை நீக்க ஆசிரியரும் சேர்த்து மொத்தம் 11 ஆசிரியர்கள் வழங்கப்படுகின்றனர்.( குறைந்த்து ஏழு ஆசிரியர்களுக்கு குறைவில்லாமல் வழங்கப்படுகிறது.) அவ்வாறு இருந்தும் ஆசிரியர்களுக்கான பணி அழுத்ததின் காரணமாக ஆசிரியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் என்ற புள்ளி விபரங்கள் காட்டுக்கின்றன. இந்நிலையில் பன்மை வகுப்புகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் ஆசிரியர்களின் மன அழுத்தம் முன்பைவிட அதிகமாகும்.அதனால் மாணவர்கள் கல்வி நலன் பாதிக்கப்படலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here