பசியில்லாத சமூகமே என் இலக்கு !

பினாங்கில் மக்கள் நலத்திட்டத்தை தொடங்கியுள்ள டத்தோஶ்ரீ தங்கேஸ்வரன்.

செ.குணாளன்

பினாங்கு, ஜன 7 –

நாட்டில் உள்ள பி40யை சேர்ந்த இந்தியர்கள், குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் பசியில்லாத வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே என் இலட்சிய நோக்கு என்று பினாங்கு மாநிலத்தில் இதுவரையில் 7 இடங்களில் தனது சமூகநல திட்டத்தைத் தொடங்கியுள்ள டத்தோஶ்ரீ தங்கேஸ்வரன் கிருஷ்ணன் கூறினார்.

 

மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு,  இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்பு, இல்லத்தரசிகள் வீட்டில் அமைந்து வேலை செய்யும் ஏற்பாடு அமைத்தும் தங்களின் தனிப்பட்ட சமூகநல திட்டத்தில் வகுத்து அதனைச் செயல்படுத்தவும்தொடங்கிவிட்டோம் என்று பினாங்குத் தீவில் 4 இடங்களிலும்,  பிறை, ஜூரு மற்றும் கப்பளா பத்தாஸ் வட்டாரத்தில் உண்மையாக ஏழ்மைநிலையில் உள்ளவர்களுக்கும், உடல்பேறு குறைந்தவர்களுக்கும் தன்னுடைய சமூகநலத் திட்டத்தின் வழி தாமே களம் இரங்கி உதவிகளை வழங்கி  வரும்  டத்தோஶ்ரீ  தங்கேஸ்வரன்  சமூகப்பணிதான் தன் நோக்கம் என்று கூறினார்.

தொடர்ந்து சமூகநலத் திட்டங்களை நாடும் முழுவதும் விரிவாக்கம் செய்யப் பயணித்துள்ள டத்தோஶ்ரீ தங்கேஸ்வரன் நோய்வாய் பட்டு மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி, பொருளாதார உதவிகள் வேண்டும் என்று கருதுபவர்கள் தங்களின் அலைப்பேசி எண்ணில் தாரளமாகத் தொடர்புகொண்டு தங்களின் உண்மை நிலவரங்களை பதிவு செய்துகொண்டால், எங்களின் சமூகவியல் குழு அதற்கான ஆய்வினை மேற்கொண்டு உதவிடத் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் விவரித்தார்.

நாடு முழுதும் சமூகப்பணிகளுக்கான அடித்தளத்தை அமைத்து வரும்  டத்தோஶ்ரீ  தங்கேஸ்வரன் கிருஷ்ணன் பினாங்கு மாநிலத்தில் ஆதரவற்றநிலையில் இருப்பவர்களுக்கும், வீதியில்படுத்து உறங்குபவர்களுக்கும் ஒரு இடத்தைத் தயார்செய்து, அவர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும், பசியில்லாமலும் வாழ ஏற்பாடு செய்வதற்கான ஒரு பொருத்தமான இடத்தை தேடிவருவதாக அவர் விவரித்தார். பினாங்கு தஞ்சோங் பூங்கா பகுதி உட்படமேலும் மூன்று இடங்களில் கடந்த வாரம் தனது உதவிப்பொருட்களை வழங்கி வந்த டத்தோஶ்ரீ  தங்கேஸ்வரன், பிறை ஜாலான்  பாரு  ஶ்ரீ  முனீஸ்வரர்  ஆலயத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியும்,  ஜூரு தோட்டமக்களுக்கு, தேவி ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்திலும், கப்பளா பத்தாஸ் கம்போங் கோயில் பகுதியிலும் நேரடியாக  மக்களைச்  சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டுஅறிந்ததுடன், உதவிகளையும் வழங்கியுள்ளார்.  கோலாலம்பூரிலிருந்து குறுகிய காலம் பினாங்கு  மாநிலத்திற்கு வருகை மேற்கொண்டு இருக்கும் இவர், தன்னுடைய சமூகப்பணி என்பது எந்த ஒரு அரசியல் நோக்கமும், இயக்கநோக்கமும் கொண்டதல்ல என்றும் விவரித்தார்.

இதுவரையில் பினாங்கில் உண்மையாக உதவிகள் தேவைப்படும் 150 குடும்பங்களுக்கு உதவியுள்ள டத்தோஶ்ரீ தங்கேஸ்வரன், உதவிகள் பெற்றுள்ள குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களின் உணவுக்கான பொருட்களையும், வேறு சில உதவிகளையும் செய்து தரப்படும் என்றும் அவர் விவரித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் அரசபரம்பரையான தெங்கு ஷாரிஃபுடின் ஷாபின்தெங்கு சுலைமான் ஷா (Y.A.M TENGKU SHARIFFUDDIN SHAH BIN TENGKU SULAIMAN SHAH AL HAJ அவர்களின் பேராதரவில் பல்லினமக்கள் பொருளாதார சிக்கல் சூழ்நிலையிலிருந்து மீண்டு வரும்   வகையில் பல உதவிகளை மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களுக்கான  உதவி  நலத் திட்டங்கள் பினாங்கு  மாநிலத்திலிருந்து தொடங்கப்பட்டதாக அவர் விவரித்தார். பினாங்குத் தீவைத் தவிர்த்து இங்குள்ள பிறை பகுதியில்   10  இந்தியக் குடும்பங்களுக்கும்,  ஜூரூ குடியிருப்பாளர் சங்கத்துடன் இணைந்து  ஜூரூ தோட்டமக்கள் 40  பேருக்கு   ரொக்க  பணஉதவிதனை டத்தோஶ்ரீ  தங்கேஸ்வரன்  எடுத்து வழங்கினார். உதவிகளை நாடும் மக்கள் எங்களுடன் தொடர்புகொள்ள வேண்டும் எனது குழுவினர் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசீலனை செய்து தேவைப்படும் உதவிகள்  வழங்கப்படும்  என  டத்தோஶ்ரீ தங்கேஸ்வரன்கிருஷ்ணன் விவரித்தார். உதவிகளைப் பெறஉள்ள இளைஞர்கள், பொதுமக்கள் 010-3221295 எனும் கைதொலைப்பேசி எண்ணுக்கு அழைத்து விண்ணப்பம் செய்துகொள்ள டத்தோஸ்ரீ கி.தங்கேஸ்வரன்  அழைப்புவிடுத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here