தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க களமிறங்குவோம்

நாகேந்திரன் வேலாயுதம்

சிரம்பான், ஜன.9-

நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள சில குறிப்பிட்ட தமிழ்ப்பள்ளிகளில் இவ்வாண்டுக்கான முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக மாநில இந்து சங்க பொது புகார் பிரிவுத் தலைவர் இராஜேந்திரன் இராஜூ கூறினார்.

அப்பிரச்சனையை எதிர்நோக்கும் அக்குறிப்பிட்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படும் அபாய நிலையை எதிர்நோக்க அப்பள்ளிகளை காப்பாற்ற வேண்டியது இம்மாநிலத்திலுள்ள ஒவ்வொரு தமிழ்ப் பேசும் இந்தியரின் முக்கிய முதன்மையான கடமை என அச்சங்கத்தின் பொருளாளருமான அவருடன், மாநிலத் தலைவர் தொண்டர்மாமணி பி.முத்துசாமி மற்றும் செயலாளர் சுப்ராய்பிள்ளை ஆகியோர் குறிப்பிட்டார்கள்.

அதே வேளை இந்து சங்க வட்டாரப் பேரவை அமைந்துள்ள அதன் சுற்று வட்டரங்களிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில்  முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில் அவ்வட்டார பேரவை பொறுப்பாளர்கள் அப்பள்ளி நிர்வாகத்திற்கு உதவ களமிறங்க வேண்டும் என அவர்கள் வேண்டுக்கோள் விடுத்தார்கள்.

நேற்று காலை 10.00 மணியளவில் தொடங்கிய அப்புகார் பிரிவின் வாரந்திர செயலவை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட அவ்வேண்டுக்கோளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வருகைந்தந்த பிற இந்திய அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதே வேளை இந்திய குடும்பங்களை சார்ந்த பெற்றோர்கள், தங்களின்    5 அல்லது 6 வயது பிள்ளைகளை தயவுசெய்து அருகிலுள்ள தமிழ்ப்பள்ளி பாலர்ப்பள்ளிகளில் பதிவு செய்யுங்கள். 

உடன் 7 வயது பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் பதிந்து கொள்ளுங்கள் என்றும்,  தொடர்ந்து, தங்கள் பிள்ளைகள் தொடக்கக்கல்வியைத் தமிழ்ப்பள்ளியிலேயே கற்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

வருங்காலத்தில் இந்திய பிள்ளைகளின் நலன் கருதியே செயல்படுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என மாநில இந்து சங்கம் முன்வைக்கும் அக்கோரிக்கையை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இடைநிலைப்பள்ளியில் தங்கள் பிள்ளைகள் பெரிய அளவில் ஏமாறாமல் இருக்க எந்தவொரு காரணத்தைக் கூறி தங்கள் பிள்ளைகளைச் சீனப்பள்ளியிலோ தேசியப் பள்ளியிலோ பதிவு செய்யாதீர்கள்! 

தமிழ்ப்பள்ளியிலேயே தங்கள் பிள்ளைகள் தொடக்கக்கல்விப் பயில்வதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

எனவே, தயவுசெய்து முற்போக்குச் சிந்தனையுடன் செயல்படுமாறு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here