தமிழ்ப்பள்ளி ஆற்றல் மிக்க மாணவர்களை செதுக்கிறது

நாகேந்திரன் வேலாயுதம்
நீலாய், ஜன.9-
நாட்டில் ஒவ்வோரு தமிழ்ப்பள்ளியும் ஆற்றல் மிக்க இந்திய மாணவர்களை கல்வியின் வழி செதுக்கி, சாதனையாளர்களாக உருவாக்கிறது என்கிறார் நீலாய் இந்தியர் சமுக நலன் கலாச்சார சங்கத் தலைவர் பி.நடராஜா.
அச்சங்கத்தின் ஏற்பாட்டில் நீலாய் வட்டார தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாய் புத்தகங்களை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், வீட்டில் பெற்றோரை காட்டிலும், பள்ளியில் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளைப் போல, அவர்களுக்கு கல்வியோடு, நல்லொழுக்கத்தையும் கற்றுத்தந்து, நல்ல பிள்ளைகளாக நம் இன மாணவர்களை உருவாக்குகிறார்கள்.
இந்த சமுதாய உணர்வு தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமே நம்மால் காணமுடியும், பல வேளைகளில் உணர முடியும்.
மொழி அழிந்தால், கலாச்சாரம் அழியும், பின்னர் அதுவே இனம் அழிய காரணமாகும் என்பதை உணர்ந்து, இந்தியப் பெற்றோர்கள்
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு கட்டாயம் அனுப்புவதை கடமையாக கொள்ள வேண்டும் என நடராஜா அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு வருகையாளராகக் கலந்துக்கொண்ட பெண் தொழில்முனைவர் திருமதி லேனி புஷ்பா மற்றும் காப்புறுதி நிறுவன செயல்முறை அதிகாரி வி.லெட்சுமணன் ஆகிய இருவரும் தலைவர் நடராஜனுடன் இணைந்து அம்மாணவர்களுக்கு அப்புத்தகங்களை அன்பளிப்பாக  வழங்கினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here