மூடும் நிலையில் சுங்கை தீமா தமிழ் பள்ளி.

லெட்சுமி ராஜூ
ஈப்போ,ஜன.07
   ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள சுங்கை தீமா தோட்ட தமிழ் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில் அப்பள்ளி மூடும் நிலையை எதிர் நோக்கி உள்ளதாக பேரா மாநில ம இ காவின் கல்வி குழுவின் தலைவர் ஜெயகோபாலன் தெரிவித்தார்.
இந்த பள்ளியில் கடந்த ஆண்டில் மார்ச் மாதம் வரை ஒரே மாணவர் மட்டும் கல்வி பயின்று வந்தார். இந்த ஆண்டில் அவர் வேறு ஒரு பள்ளிக்கு சென்று விட்டதால் இந்த ஆண்டு வரை ஒரு மாணவர் கூட பதிவு செய்யப்படாமல் உள்ளது.
   சுங்கை தீமா தோட்டத்தில் பணிப்புரிந்து வந்த தோட்டத்தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு சென்று விட்டதால் மாணவர்கள் இல்லாத நிலையை இப்பள்ளி எதிர் நோக்கி உள்ளது.
   ஹிலீர் பேராக் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நகரமான லங்காப்.நகரில் தமிழ் பள்ளி இல்லாததாலும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவதாலும் சுங்கை தீமா தமிழ் பள்ளியின் லைசன்ஸ் கொண்டு லங்காப்பில் தமிழ்  பள்ளி கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயகோபாலன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here