கோவாக்சின்’ தடுப்பூசியை பயன்படுத்த விரும்பவில்லை: சட்டீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர்

ராய்பூர்-
சட்டீஸ்கரில் ‘கோவாக்சின்’ தடுப்பூசியைப் பொதுமக்களுக்குச் செலுத்த விரும்பவில்லை என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் தெரிவித்தார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா தொற்றுக்கு எதிராக ‘கோவாக்சின்’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
இந்த தடுப்பூசியையும், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. எனினும் ‘கோவாக்சின்’ தடுப்பூசியின் 3- ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பே அதனை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதித்தது விமா்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் சட்டீஸ்கரில் கோவாக்சின் தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த விரும்பவில்லை என்று அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் தெரிவித்தார். 
கோவாக்சின்’ தடுப்பூசியின் 3- ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பாக அதனை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அந்த தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள், அந்த முடிவுகள் குறித்த ஆய்வு நிறைவடைவதற்கு முன்பாக, வேகம் காட்டக் கூடாது. இதை மற்ற நிறுவனங்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கோரும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here