சாதனைகள் படைத்து வரும் ஆசிரியர் அசோக் பிள்ளை

லெட்சுமி ராஜூ

ஈப்போ,ஜன.09-

தோட்டத்தமிழ் பள்ளியில் படித்து பல சாதனைகளை படைத்து வருகிறார் ஆசிரியர் அசோக் பிள்ளை குப்புசாமி.

ஆசிரியர் அசோக் 1989 முதல் 1994-ஆம் ஆண்டு வரை சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தம் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். 1995 முதல் 2000 -ஆம் ஆண்டு வரை டத்தோ ஹாஜி தாயிப் இடைநிலைப் பள்ளியை முடித்தார்.தொடர்ந்து, துவாங்கு பைனுன் ஆசிரியர் பயிற்சியில் டிப்ளோமா பெற்றார். இளங்கலை  கல்வியை OUM – இல் முடித்த பின் தனது கல்விப் பயணத்தை 2005ம் ஆண்டு உலு கெருன்தும் பூர்வக்குடியினர் பயிலும் மலாய்ப்பள்ளியில் தொடங்கினார். அந்த பள்ளியில் ஆசிரியர் அசோக் அறிவியல் ஆசிரியராக பணியைத் தொடங்கினார்.தொடர்ந்து, பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி, கம்போங் சீமி தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில்  பணிப்புரிந்த பின்னர்  தான் படித்த சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கே ஆசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார்.

இவர் 16 ஆண்டு காலம் அறிவியல் ஆசிரியராகச் சேவையாற்றியுள்ளார்.  மாணவர்களை அறிவியல் போட்டிகளில் பயிற்சி அளித்து வெற்றிப் பெற செய்துள்ளார்.

அறிவியல் ஆற்றலை மாணவரிடம் வளர்ப்பதை தன் தலையாய கடமையாக நினைத்து இளம் அறிவியலாளர் விழாவில் பள்ளியைப் பிரதிநித்து மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் சிறப்பாக கலந்து கொண்டார்.இந்தியர்கள்

இரண்டு முறை கல்வி இலாகாவால் சிறந்த சேவையாளர் விருது (APC) பெற்றார்.(2008,2016).TEACHER of the YEAR 2020 – International Human Solidarity Day. அனைத்துலக பசுமைத் திட்டப் புத்தாக்கப் போட்டியில் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை’ இதுதான் தனக்குப் பிடித்தச் சுலோகம் என்று கூறும் துடிப்பு மிக்க இளைஞன். தன் ஆற்றலையும் திறமையையும் பல அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்திப் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நம் இளம் விஞ்ஞானி ஆசிரியர் திரு,அசோக் பிள்ளை குப்புசாமி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here