பேராவில் குறைந்த மாணவர்கள் கொண்ட 11 தமிழ்ப்பள்ளிகள் காப்பாற்றப்படும் – டத்தோ பி. கமலநாதன்.

ஆர்.கிருஷ்ணன்

ஈப்போ,

பேராவில் தற்போதிய நிலவரப்படி 11 தமிழ்ப்பள்ளிகள் பத்து மாணவர்களுக்கு குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் மாற்று இடம் அடையாளம் காணப்படும். இந்த பள்ளிகள் அமைந்துள்ள ம இ கா தொகுதிகளின் உதவியோடு இந்த பள்ளிகள் உருமாற்றம திட்டம் அமலாக்கம் செய்யப்படும் என்று ம இ கா கல்விப் பிரிவு தலைவர் டத்தோ பி. கமலநாதன் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் பதிவு அதிகரிக்க வேண்டுமென்றால் கடந்த காலங்களில் தமிழ்ப்பள்ளிகளின் வெற்றிகளை இந்திய பெற்றோர்களிடம் பகிர வேண்டும். அதுமட்டுமன்றி, தமிழ்ப்பள்ளிகளின் பயின்ற மாணவர்களின் சாதனைகளையும் இந்திய சமூகத்திடம் எடுத்துரைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில் பயின்று இன்று பல்கலைக்கழகத்தில் சிறந்த விளங்கும் இந்திய மாணவர்களின் வெற்றியை ஊடகங்கள் வாயிலாக பகிர்வது மிக முக்கியதுவமாகும். அத்துடன், இன்று பல தொழில் துறையில் இந்திய மாணவர்களின் ஈடுபாடு மற்றும் வெற்றியை அடையாளம் கண்டு மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அதோடு, தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானப்பணிகள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அதனால், இந்திய பெற்றோர்கள் இங்கே பதிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ப்பள்ளிகளில் போதிக்கும் ஆசிரியர்கள் 90 சதவீதம் பட்டதாரி ஆசிரியர்கள். அத்துடன், இந்திய ஆசிரியர்கள் சிறந்த முறையில் அர்பணிப்புடன் போதித்து வருகின்றனர். ஆகவே, தற்போது சிறந்த ஆசிரியர்களை கொண்டுதான் நாடு முழுவதும் தமிழப்பள்ளிகள் இயங்கி வருகின்றனர் என்று அவர் பாராட்டினார்.

99 சதவீத சீன மாணவர்கள் சீனப்பள்ளிக்குதான் செல்லுகின்றனர். அவர்களிடம் உள்ள மொழி உணர்வு மற்றும் இன உணர்வுவை பின்பற்றி இந்தியர்கள் செயல்பட்டால் தமிழ்ப்பள்ளிகளில் இந்திய மாணவர்களின் பதிவு எண்ணிக்கை நிச்சியமாக உயரும். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறந்த தொழில் புரியும்  இந்தியர்களும் தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவதில் முனைப்பு காட்டுவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டில் 11748 மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் படித்துள்ளனர் என்று தரவு கூறுகிறது. இந்த எண்ணிக்கை இவ்வாண்டில் அதிகரிக்க வேண்டும் என்று இங்கு நடைபெற்ற குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளியின் நிர்வாகத்தினரிடம் சந்திப்பு கூட்டம் நடத்திய பிறகு பின்வருமாறு அவர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here