கையுறைத் துறையில் உற்பத்தியைப் பெருக்கும் பெருநிறுவனம்

iNix Tecnologies  Holdings Bhd  நிறுனத்திற்குச் சொந்தமான துணை நிறுவனம்  iNix Glove Manufacturing Sdn Bhd  சிலாங்கூர் பெரனாங்கில் 2,25 ஏக்கர் தொழிற்சாலை தளத்தை 10 ஆண்டுகால ஒப்பந்த குததகைக்குப் பெற்றுள்ளது. 

இது குறித்து அந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் சிவகுமார் கலுகசலம் பேசுகையில், நிர்வாக உறுப்பினர்கள் அனைவரின் முழுமையான ஆதரவோடு எங்கள் நிறுவனம் கடந்த மாத தொடக்கத்தில் L&S Gloves Sdn Bhd நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு 45 விழுக்காடு முன் தொகையும் வழங்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே அந்த iNix நிறுவனத்தின் தலைவர்  Tansri சைட் முகமட் பேசுகையில் கையுறைதுறையில் எங்கள் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்த இத இரு தளங்களைக் குத்தகைக்குப் பெற்று உற்பத்திகளை வலுப்படுத்தவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக L&S Gloves Sdn Bhd நிறுவனம் ஏற்கெனவே இரு உற்பத்தித் தளங்களைக் கொண்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின்  வாயிலாக இவ்விரு நிறுவனங்களும் மேலும் இரு தளங்களை அடுத்த மாதம் தொடங்கி செயல்படுத்தவுள்ளது.

இதன் அடைப்படையில் இந்த iNix நிறுவனம்  ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இரு தளங்களை உள்நுழைத்து 12 மாதங்களுக்குள் 14 தளங்களாக செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here