81 -வது பிறந்த நாள் : கே.ஜே.ஜேசுதாசுக்கு 28 பாடகர்கள் சூட்டிய ‘பாட்டுச்சரம்’

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு நேற்று 81 -வது பிறந்த நாள்.

இதனை யொட்டி 28 பாடகர்கள், ஜேசுதாசின் பெருமைகளை விளக்கும் பாடலை ஒன்றாக பாடி நேற்று ஆல்பமாக வெளியிட்டுள்ளனர்.

‘மன்னிண்டே புண்ணியமாம் காந்தர்வ காயகா’ என தொடங்கும் இந்த புகழ்மாலையை, ஹரி நாராயணன் எழுத, பாடகி ஸ்வேதா மோகன் இசை அமைத்துள்ளார்.

ஸ்வேதாவின், அதிகாரப்பூர்வ யு-டீயூப்பில் இந்த பாடலை பாடகர் சங்கர் மகாதேவன் வெளியிட்டார்.

சித்ரா, சுஜாதா, சீனிவாஸ், உன்னி மேனன் உள்ளிட்டோர் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

ஜேசுதாஸ், தனது பிறந்த நாளின்போது கொல்லுர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கடந்த 48 ஆண்டுகளில் இந்த முறை அவர் மூகாம்பிகை கோயிலுக்குச் செல்லவில்லை.

காரணம்?

கொரோனா.

அமெரிக்காவின் டல்லாசில் ஜேசுதாஸ், தனது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

மலையாள சூப்பர்ஸ்டார்கள் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் கே.ஜே.ஜேசுதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here