இராமேஸ்வரி ராஜா
ஜன. 13-
நாடு தழுவிய அளவிலான ஆஸ்மோ ஒலிம்பியாட் ( ASMO OLYMPIAD) கணிதப் போட்டியில் தேசிய அளவில் கலந்து கொண்ட ஐந்து தமிழ்ப்பள்ளி மாணவர்களில் சுங்கை குருயீட் தோட்ட தமிழ்ப்பள்ளியின் 5 ஆம் ஆண்டு மாணவன் செல்வன் ஸோமேஸ்வரனும் அடங்குவார். அவர் ‘மெரிட்’ எனப்படும் (நனிச்சிறப்பு) தகுதியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார் என
தலைமையாசிரியர் பெ. பிரகாஷ் தெரிவித்தார்.
மலேசியாவில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் மட்டுமே இப்போட்டியில்
கலந்துகொண்டது. அத்துடன் சிறப்பு தேர்ச்சியும் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ஒன்றாக பேராக் மாநிலத்திலிருந்து சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி கலந்து கொண்டது பெருமையடைய செய்துள்ளது. நனிசிறப்பு தகுதியைப் பெற்ற மாணவனுக்கும் பெற்றோருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், பயிற்சி அளித்த ஆசிரியை செல்வராணி உத்திரக்குமாரன் அவர்களுக்கும் பாராட்டினை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.