இந்நிலையில் நெல்லை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் முகம்மது காலித் அறிவுறுத்தலின் பேரில், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ஜான் சுபாஷ், கால்நடை மருத்துவர் பாபு மற்றும் உதவி மருத்துவர் பொன்மணி ஆகியோர் அடங்கிய குழு செந்தில்நகர் பகுதியில் முழுமையாக ஆய்வு நடத்தியது. அங்கு கோழிகள் வளர்க்கும் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
அத்தெருவில் உள்ள பொதுமக்களை அழைத்து கோழி, சேவல் மற்றும் வளர்ப்பு பறவைகளுக்கு ஏதேனும் நோய் உள்ளதா என விசாரணை நடத்தினர். இறந்த கோழியின் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நெல்லையில் பறவைக் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. மழைக்காலம் என்பதால் ஆடு, மாடுகள், கோழிகளை சில நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. அதற்கும் பறவை காய்ச்சலுக்கும் தொடர்பில்லை.
இருப்பினும் ஏதாவது ஒரிடத்தில் பறவைகள் இறப்பு தென்பட்டால் உடனடியாக கால்நடைத்துறையை தொடர்பு கொள்ள பொதுமக்களை கேட்டுக் கொண்டு வருகிறோம்’’ என்றனர். மேலும் பறவைகள் இறந்த பாளை செந்தில்நகர் பகுதியில் ஒருவாரம் தொடர் கண்காணிப்பு நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.