சுகுவிற்கு மூன்று ஆண்டு நன்னடத்தை ஜாமின்.

ஈப்போ, ஜன.11-
பொது இடத்தில் ஆயுத வைத்திருந்த காரணத்தால் குற்றம் சாட்டப்பட்ட யூ டியூப் பிரபலம் சுகு பவித்ரா என்று அழைக்கப்படும் எஸ்.பவிராவின் கணவர் எஸ்.சுகுவிற்கு ஈப்போ செக்‌ஷன் நீதி மன்றத்தில் மூன்று ஆண்டு காலத்திற்கு நன்னடத்தை ஜாமின் விதிக்கப்பட்டது.
     நீதிபதி நோரஷிமா காலிட் முன்னிலையில் நடந்த இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட எஸ்.சுகுவிற்கு மூன்று ஆண்டு கால நன்னடத்தை ஜாமின் மற்றும் தனி நபர் 8 ஆயிரம் வெள்ளி உத்தரவாதம் விதிக்கப்பட்டது.
மேலும் நீதிமன்ற செலவுத்தொகையாக மூன்று ஆயிரம் வெள்ளியும் எஸ்.சுகு செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட எஸ்.சுகுவின் சார்பில் ஆஜரான நீதிபதிகள் முகமட் ஆபிஸ் (Muhammad Hafiz Jalaludin) ஜலாலுடின் மற்றும் ஷாருல் நிசாம் முகமட் ரபி இருவரும் எஸ்.சுகுவின் மீது இதற்கு முன் குற்றப்பதிவுகள் ஏதும் இல்லை, குண்டர் கும்பல் போன்ற நடவடிக்கைகளிலும் அவர் ஈடுப்பட்டதில்லை. இரண்டு சிறு வயது பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பும் அவர் கொண்டுள்ளார் என்று தங்களுடைய வாதத்தை முன் வைத்தனர்.
    கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி மாலை நான்கு மணியில் இருந்து ஆறு மணிக்குள் ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனையின்  கார் நிறுத்துமிடத்தில் 66 சென்டி மீட்டர் நீளமுள்ள  கத்தி ஒன்றை வைத்திருந்ததாக சுகு மீது குற்றம் சாட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here