கோலாலம்பூர் பொது பூங்காக்கள் கடுமையான நிபந்தனையுடன் திறக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூரில் உள்ள பொது பூங்காக்கள் கடுமையான கட்டுபாட்டுடன் மீண்டும் திறக்கப்படும் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டான் ஸ்ரீ அன்னுவார் மூசா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பூங்காக்களுக்கு வருபவர்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (என்.எஸ்.சி) நிர்ணயித்த நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) கடைபிடிக்க வேண்டும்.

இதன் பொருள் குழு நடவடிக்கைகள், ஏரோபிக்ஸ் மற்றும் பிக்னிக் ஆகியவற்றை நடத்த முடியாது என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) ஒரு நேரடி  முகநூல் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் (டி.பி.கே.எல்) இரண்டு நாட்களுக்கு முன்பு பூங்காக்களை மூட உத்தரவிட்ட போதிலும் அன்னுவார் இதனைக் கூறினார்.

பூங்காவை மீண்டும் திறப்பதற்கான முடிவு பொதுமக்களிடமிருந்தும், கோலாலம்பூர்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னர் எடுக்கப்பட்டது. பூங்காக்கள் மூடப்படுவது என்.எஸ்.சியின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இல்லை என்று கூறினார். எடுத்துக்காட்டாக, ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை அனுமதிக்கப்படுகிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here