டிசிபியை தடுத்து நிறுத்திய காவலாளிக்கு தண்டனை – பொதுமக்கள் எதிர்ப்பு!

கேரள மாநிலம் கொச்சிக்கு புதிய டிசிபியாக ஐஸ்வர்யா டாங்க்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவின் இளம் டிசிபியும் இவரே. கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சி நகர வடக்கு காவல் நிலையத்திற்கு ஐஸ்வர்யா டாங்க்ரே மப்டியில் விசிட் அடித்துள்ளார்.

அப்போது வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலாளி , இவரை அடையாளம் தெரியாத காரணத்தினாலும் மப்டியில் இருந்ததாலும் தடுத்து நிறுத்தி உள்ளார்.

கடுப்பான ஐஸ்வர்யா டாங்க்ரே தான் யாரென்று சொல்லி , என்னையே தெரியவில்லையா 2 நாட்கள் போக்குவரத்து பணியில் ஈடுபடு என தண்டனை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் வெளியே கசிந்த நிலையில் ஐஸ்வர்யாவின் செயலுக்கு கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் கேரள உள்துறை அலுவலகத்தில் இருந்து ஐஸ்வர்யா டாங்க்ரேவிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய செயலை செய்த ஐஸ்வர்யா டாங்க்ரேவிற்கு தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here