எம்ஜிஆர் 104வது பிறந்த நாள் விழா: ஊத்தங்கரை அருகே நல உதவி வழங்கி கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 104 ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி தலைமை வகித்தார். படப்பள்ளி ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேஸ்வரி சரவணன், ஊர் செட்டியார் குப்புசாமி , ராதாகிருஷ்ணன், சுப்பிரமணி, ராமசாமி, மணி, சீனிவாசன், ஓட்டுனர் அணி ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தொடர்ந்து படப்பள்ளி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here