பாதுகாக்கப்படும் வனவிலங்கு சட்டத்தில் ஒருவர் கைது- பொருட்கள் பறிமுதல்

ஜோகூர் பாரு
வனவிலங்கு சட்டத்தின் கீழ் பறவைகள் கடத்தல் தொடர்பாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஒரு நபர் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இங்குள்ள கோத்தா திங்கியில் உள்ள ஃபெல்டா புக்கிட் வாகாவில் 62 பறவைகள் வெள்ளை நிறமுள்ள ஷாமா வகை  பறவை (புருங் முராய் பாத்து) இனத்தை முறையான  ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் (பெர்ஹிலித்தான்) இயக்குநர் சல்மான் சாபன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் அதிகாரிகள் 43 வயதான நபரை பிற்பகல் 2.30 மணியளவில் கைது செய்து 62 புருங் முராய் பாத்து, அதே இனத்தைச் சேர்ந்த 35 உயிரற்ற, பறவைகள்,  51 இரும்புக் கூண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்டவைகளின் மதிப்பு 15,000 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது. “வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 2010 இன் பிரிவு 60 இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே  விதிக்கப்பட வகை செய்வதான தண்டனையாக  இருக்கும் என்று சல்மான் கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தெலுக் ராமுனியாவில் 260 புருங் முராய் பாத்து வகை பறவைகளை அண்டை நாட்டிற்குக் கடத்த முயன்றதாகக் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here