கவின்மலர்
தெலுக் இந்தான்,ஜன.18-
நமது தமிழ்ப் பெண்கள் சீனப் பெண்களின் வியாபார சிந்தனைத் திறனைப் முன் மாதிரியாகக் கொண்டு வணிகத்தின் வழி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பிரைமஸ் வெல்னெஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திருமதி செல்வமலர் செல்வராஜ் கேட்டுக்கொண்டார்.
தெலுக் இந்தான் மக்கள் ஓசை செய்தியாளர் டில்லி ராணி ஏற்பாட்டில் பேராக் மாநில இந்தியர் முன்னேற்ற மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற பிரைமஸ் தமிழர் பராம்பரிய மூலிகைப் பொருட்களின் விளக்கமளிப்புக் கூட்டத்தில் பேசிய அவர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.
குறை கண்டோம் குறை கலைய வழி கண்டோமில்லை என்பதற்கு ஏற்ப யாரும் உதவவில்லை ,வழிகாட்டவில்லை, ஆதரிக்கவில்லை என்று அடுத்தவரை குறைச் சொல்லிக் கொண்டிருக்கிறோமே யன்றி நாம் மனம் மாற்றம் பெற வேண்டும் என்று நமது பெண்கள் சிந்திப்பது இல்லை.வர்த்தகத் துறையில் முன்னேற வேண்டும் என்ற மன மாற்றமும் மனம் தளரா முயற்சியும் இருந்தால் போதும்.எங்கோ ஓரிடத்தில் தொடங்க வேண்டும்.அது ஏன் பிரைமஸ் பொருட்களை முதலீடு் இல்லாமல் எடுத்து விற்பதன் வழி தொடங்கக் கூடாது என்று செல்வமலர் கேள்வி எழுப்பினார்.
புதிதாக வியாபாரத்துறையில் ஈடுபடுபவர்களாக இருந்தாலும் பழையவர்கள் ஆனாலும் பிரைமஸுடன் நீங்கள் செய்யும் அனைத்து வணிக பரிவர்த்தனைகளும் பொருளகத்தின் வழி மட்டுமே கணக்கு வைக்கப்படுவதால்,தங்களின் அந்த வரவு செலவு கணக்கறிக்கையை நமக்குத் தேவைப்படும் போது பொருளகத்திலிருந்துப் பெற்றுக் கொள்ளலாம். அது நமது கணக்கை சரி பார்க்க மட்டுமல்ல அதன் வழி வீடு,கார் என்று எத்தகைய சொத்து வாங்குவதாக இருந்தாலும் அந்த கணக்கறிக்கைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.வெளியில் வேலைக்குச் செல்லாத குடும்பப் பெண்களுக்கும் இத்தகைய கணக்கறிக்கைப் பெரிதும் பயன்படும்.
தரமான பொருட்களைக் கொண்டு எத்தகைய ரசாயனப் பொருட்களின் கலப்பும் இல்லாமல் சுத்தமான முறையில் நமது முன்னோர் கண்ட முருங்கை,மஞ்சள் போன்ற மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பயன்பாட்டுப் பொருட்களைப் பெற்று விற்பதன் வழி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.மற்றவர்கள் முன்னேறவும் வழி காட்டுங்கள் என்று செல்வமலர் கேட்டுக்கொண்டார். மக்கள் ஓசையின் இயக்குநர்களில் ஒருவரான க.சிவநேசன் கலந்துக்கொண்ட இந்நிகழ்ச்சியில் டில்லி ராணி நன்றியுரையாற்றினார்.