கவின்மலர்
பீடோர்,ஜன.19-
தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருளான முருங்கையையும்,மஞ்சளையும் பயன்படுத்தி பல சத்துணவுப் பொருட்களையும்,வெளிப்பயன்பாட்டுப் பொருட்களையும் உற்பத்தி செய்து வளரும் வணிகர்களை உருவாக்கி வரும் மைஸ்கிலின் பிரைமஸ் வெல்னெஸ் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்வதன் வழி வணிகத் துறையில் கோலோட்சத் துடிக்கும் கோகிலவாணி தபெ ஐயாதுரை ( வயது 35 )மற்ற பெண்களுக்கு ஒரு முன் மாதிரி என்று சொன்னால் அது மிகையாகாது.
கடந்த வாரம் பீடோரில் நடந்த பிரைமஸ் பொருட்கள் அறிமுகக் கூட்டத்தில் பொருட்களின் விற்பனை முகவராக இணைந்த கோகிலவாணி அடுத்த நாள் முதலே விற்பனைத்துறையில் பரபரப்புடன் ஈடுபட்டு வருவது வியப்பாகவுள்ளது.
” உயிர்களுக்கு தினமும் பசி எடுக்கும் என்பது போல் 10 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட நான்கு பெண் பிள்ளைகளுடன் வாழ்க்கைப் போராட்டங்களை அன்றாடம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் தனித்து வாழும் தாயான கோகிலவாணி நல்லோரது நல்லாதரவுடன் மற்றவர்களிடம் கையேந்தாமல் கடும் உழைப்பால் வாழ்கையில் முன்னேறவும் பிள்ளைகளை கரைசேர்க்கவும் முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவரது கணவர் 2011 ஆம் ஆண்டு இவர்களது கடைசி மகள் 4 மாத குழந்தையாக இருந்த பொழுது சாலை விபத்தில். இறந்தார்.இவர்களது திருமணம் முறையாக பதிவு செய்யாத காரணத்தால் எந்த இழப்பீட்டுத் தொகையும் இவருக்குக் கிடைக்கவில்லை.இவரது மூத்த மகள் இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதவுள்ளார்.அவர் கல்வி கற்கவும் இயங்கலையில் படிக்கவும் மற்ற பாடங்களைச் செய்யவும் மடிக்கணினி் தேவைப்படுகிறது.இயன்றவர்கள் வாங்கித் தருவார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.பிரைமஸ் தலைமைச் செயல் அதிகாரி திருமதி செ.செல்வமலர் மனம் தளராமல் தொடர்ந்து வணிகத்தில் ஈடுபடுங்கள்.நாங்கள் உதவுகிறோம் என்று சொல்லியுள்ளார் என்று கோகிலவாணி தெரிவித்தார்.
என் மகளும் தமது நண்பர்களின் பெற்றோரிடம் இப்பொருட்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.அவர்களின் வழியாகவும் எங்களுக்கு விற்பனை வாய்ப்பு கிடைக்கும் என்று கோகிலவாணி நம்பக்கைத் தெரிவித்தார்.தனித்து வாழும் பெண்களால் தனித்தன்மையுடன் செயல்பட முடியாது என்பது அந்தக் காலம்.தனித்து வாழும் தாய்மார்களும் தனியாக நின்று வெற்றி பெற முடியும் என்பதற்கு கோகிலவாணி நல்லதொரு எடுத்துக்காட்டு என்று செல்வமலர் புகழ்ந்துரைத்தார்