தமிழ்ப்பள்ளி இந்தியர்களின் தேர்வு பள்ளியாக இருக்க வேண்டும்

சிரம்பான், ஜன.20-

இந்நாட்டில் இந்தியர்கள் பல பிரிவுகளாக இருந்தாலும், தமிழ்ப்பள்ளியே அவர்களின்  தாய்மொழி பள்ளியாக திகழும் வேளையில், இப்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புவதே சிறந்த ஒரு முடிவாக அமையும் நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் கூறினார்.

சீன சமுகத்தில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், தாய்மொழி பள்ளியாக சீனப்பள்ளி எங்களின் தேர்வு பள்ளியாக 

திகழ்கிறது என்றும், 90 சதவீதம் சீன பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தாய்மொழி பள்ளியான சீனப்பள்ளிக்கே அனுப்புகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்திய பெற்றோர்களை பொருத்தமட்டிலும் சுமார் 40 சதவிதம்தான் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்பது வேதனைக்குறிய செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு சிரம்பான் 2 கான்வெண்ட தமிழ்ப்பள்ளிக்கு வருகைப்புரிந்த அவர், முன்னதாக அப்பள்ளியில் பயிலும் பி40 குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கு பள்ளி உபகரண பொருட்களை வழங்கினார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்நாட்டில் தாய்மொழி பள்ளிகள் நிலையாக இருக்க தொடர்ந்து காக்கப்பட வேண்டும், அது அந்தந்த சமுகத்திலுள்ள பெற்றோர்களின் முதன்மை கடமையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம் இந்நாட்டில் இந்தியர்களின் மொழி கலை கலாச்சாரம் ஆகியவை மறக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து இந்நாட்டில் இருப்பதை அச்சமூகம் உறுதி செய்ய வேண்டும். தாய்மொழியில் பேசுவதற்கு வெட்கமோ தயக்கமோ காட்டும் போக்கிலிருந்து அச்சமூகம் விடுபட வேண்டும் என சா அறிவுறுத்தினார்.

அதே வேளை இந்தியர் சார்ந்த பொது நிகழ்ச்சிகள், வேற்று இனத்தார் பிரமுகர்களாக கலந்துக்கொண்டாலும், அங்கு மேடை பேச்சின் போதும், அறிவிப்பின் போதும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் வழங்குமாறு 

அவர் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here