சமீபத்தில் நடிகை ரேகா பிக்பாஸ் ஃபினாலேவில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்வு செய்துள்ளார். அதில் நிஷா, அர்ச்சனா, சோம சேகர் ஆகியோருடன் காணப்படுகிறார் ரேகா. இதனை பார்த்த ரசிகர்கள், அர்ச்சனா முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர் லாஸ்லியா பின்னால் நிற்கிறார் என சொல்லி வருகின்றனர். இன்னும் சிலர் லாஸ்லியாவும் கவினும் பேசிக் கொண்டார்களா என்றும் கேள்வி எழுப்பி கொண்டு வருகின்றனர்.