இயங்கலை வகுப்புகள் நடந்தாலும் மாணவர்களின் பதிவுக்கு காலம் கடத்த வேண்டாம்.

கவின்மலர்

பாரிட் புந்தார், ஜன.20-

மலேசியாவில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளின் 2021 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டு இன்று முதல் தொடங்கினாலும் இன்னமும் தங்கள் பிள்ளைகளை ஒன்றாம் ஆண்டிற்குப் பதிந்துக்கொள்ளாத பெற்றோர் மேலும் காலம் கடத்தாமல் தங்கள் பிள்ளைகளை விரைந்துப் பதிந்துக்கொள்ள வேண்டும் என்று கிரியான் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத் தலைவர்இரா.சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.

கிரியான் மாவட்டத்தில் செயல்படும் 14 தமிழ்ப்பள்ளிகளில் நேற்று வரை 106 மாணவர்கள் பதிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரம் வரை பதிவுகள் வரலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோரைப் பொறுத்தமட்டில் பள்ளி திறக்கும்  முதல் நாள் தொடங்கி மறு வாரம் வரை பிள்ளைகளைப் பதிவு செய்வது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.அதன் அடிப்படையில் இந்த எண்ணிக்கை அடுத்த ஒரு வார காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார் என்றாலும் மாணவர்களின் முதலாம் ஆண்டு பதிவில் இந்திய பெற்றோர் கடைசி நேரம் வரை காத்திருக்கும் மனப்போக்கு மாற வேண்டும்.குறிப்பாக இப்போது இயங்கலையில் வகுப்புகள் நடப்பதால் பள்ளிகள் திறக்கவில்லை என்ற மனப் போக்கில் நமது பெற்றோர் ஏனோ தானோ என்று இருந்துவிடக் கூடாது.என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் முதலாம் ஆண்டு பதிவில் பெற்றோர் காலம் கடத்துவதால் அவர்களின் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைப்பதில் கால தாமதம் அல்லது முற்றிலும் கிடைக்காமல் போகும் சூழல் ஏற்படலாம் என்று அவர் நினைவுறுத்தினார்.குறிப்பாக பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுத் தொடக்கத்தில் வழங்கப்படும்,நூறு வெள்ளி உதவித் தொகை,பள்ளி நாட்கள் முழுவதும் வழங்கப்படும் சத்துணவு,இலவசப் பாட புத்தகம் போன்றவை அதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.கிரியான் மாவட்டத்தில் செய்ல்படும் இரு பெரிய தமிழ்ப்பள்ளிகளான பாரிட் புந்தார் செயின்ட் மேரி தமிழ்ப்பள்ளி,பாகான் செராய் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றி தலா இரு அரசாங்கம் பாலர் வகுப்புகள் செயல்படுவதால் அவற்றில் மேலும் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப பெற்றோர் உடனே பிள்ளைகளை பதிந்துக்கொள்ளலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார்.இவ்வாண்டிற்கான மாணவர்கள் மட்டுமல்லாமல. அடுத்தடுத்த் ஆண்டுகளில் பயிலவுள்ள மாணவர்களையும.இப்போதே பதிந்துக்கொள்ளலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here