தலைவர் பதவியை கைவிடுங்கள் – அஹ்மத் ஜாஹிட் ஹமிடிக்கு அழுத்தம்

புத்ராஜெயா: தலைமை மற்றும் வழிநடத்துதலின் பற்றாக்குறை காரணமாக உறுப்பினர்கள் அதிருப்தி அடைவதாகக் கூறி, கட்சி தலைவர் பதவியை கைவிடுமாறு அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடிக்கு அம்னோ உறுப்பினர்  பகிரங்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

சில உச்ச மன்ற  உறுப்பினர்கள் மற்றும் அதன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் பிரச்சினைகள் மற்றும் கொள்கைகள் குறித்த அம்னோவின் நிலைப்பாட்டிற்கு இணங்கவில்லை என்று பயா பெசார் பிரிவுத் தலைவர் டத்தோ அஹ்மத் தாஜுதீன் சுலைமான் தெரிவித்தார்.

இது கட்சியை தாக்குதல்களுக்கு உட்படுத்தியுள்ளது, இதன் விளைவாக மலாய்க்காரர்கள் கட்சி மீதான நம்பிக்கையை இழந்தனர். உண்மை என்னவென்றால், 15ஆவது பொதுத் தேர்தலில் எங்களுக்கு அவர்களின் ஆதரவு மிகவும் தேவை என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அம்னோ தலைவர் எதிரான முறைகேடு தொடர்பாக வழக்குத் தொடுப்பது “அம்னோ மீண்டும் உயர முயற்சிப்பதைத் தடுக்கும் பெரும் சுமை” என்றும் அஹ்மத் தாஜுதீன் சுட்டிக்காட்டினார்.

மலாய்க்காரர்களுக்காக, அம்னோ, கட்சியின் 3.6 மில்லியன் உறுப்பினர்களின் உறுதியும், அம்னோ தலைவராக தனது பொறுப்புகளை கைவிடுவதுப் டத்தோ ஶ்ரீ  அஹ்மத் ஜாஹிட் எடுக்கும் சரியான முடிவு  என்று அவர் கூறினார்.

கூட்டரசு பிரதேசம்  மற்றும் பொந்தியான் அம்னோ இளைஞர் தலைவர்கள் உட்பட அம்னோ தலைமையின் மாற்றத்திற்காக ஏற்கனவே அழைப்புகள் வந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here