நடமானடக் கட்டுப்பாடடு ஆணைக் காலத்தில் நாள் தோறும் பிக் போஸ் உணவகம்100 பேருக்கு இலவச உணவு வழங்குகிறது.

கவின்மலர்

நிபோங் தெபால்,ஜன.21-

கோவின்-19 தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக வருமானமில்லாமலும் உணவுக்கு வழியில்லாமலும் உள்ள நூறு பேருக்கு ஒவ்வொரு நாளும் இலவச உணவு வழங்கி வருவதாக இங்குள்ள பிக் போஸ் வாழை இலை உணவக உரிமையாளர் மோகனசுந்தரம் த/ பெ. முருகையா ( வயது 37 ) தெரிவித்தார்.

கடந்தாண்டு நிபோங் தெபால் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகம் எங்கள் கடையின் வழி நூறு பேருக்கு இலவச உணவு வழங்கிய போது நாங்களும் நூறு பேருக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்டு மொத்தம் இருநூறு பேருக்கு  ஏறத்தாழ 55 நாட்கள் இலவச உணவு வழங்கினோம்.அப்போது இவ்வட்டாரங்களிலுள்ள பலர் நேரடியாக வந்து வாங்கிப் பயனடைந்த்துடன் வர இயலாத நோயாளிகளுக்கும்,நடமாட முடியாதவர்களுக்கும் நேரடியாக கொண்டு கொடுக்கும் ஏற்பாட்டைச் செய்தோம் இம்முறை யாரும்  கேட்டுக்கொள்ளாவிட்டாலும் நாங்கள் எங்கள் உணவகத்தின் சார்பில் இத்திட்டத்தைத் தொடர்கிறோம்.

உணவுக்குக் கூட வழியில்லாமல் பசியால் துடிக்கும் வேதனை என்ன என்று எனக்குத் தெரியும்.எனது 20 வயதில் பெற்றோருடன் கோபித்துக்கொண்டு ஓரிரு நாட்கள் சாப்பிடாமல் பச்சைத் தண்ணீரைக் குடித்துக்கொண்டு துடித்ததும் அழுததும் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.எனவே பசியால் யாரும் வாடக் கூடாது.அத்தகையோருக்காக ஏற்பாடு செய்துள்ள இத்திட்டத்தில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களும் உணவைப் பெற்று பசியைப் போக்கிக்கொள்ளலாம்.ஒரு நாளைக்கு சைவ உணவும் ஒரு நாளைக்கு அசைவ உணவும் வழங்கப்படுகிறது.கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் வரை தாம் இந்த இலவச உணவை வழங்க இருப்பதாகத் தெரிவித்த சோமசுந்தரம் தமக்கு தமது துணைவியார் விஸ்வரோகிணி நாராயணசாமியும் கடைப் பணியாளர்களும் ஒத்துழைப்புத் தருவதாக கூறினார்.

ஏற்கனவே இவ்வட்டாரத்தில் ஏழு இடங்களில் அங்காடி உணவகங்களை நடத்தித் தோல்விக் கண்ட தாம் இப்போது இந்த பிக் போஸ் உணவகத்தைத் திறந்த ஒன்றரை ஆண்டுகளில் ஓரளவு வெற்றி பெற்று வருவதாக கூறினார்.தமது ஆத்ம திருப்திக்காக சமுதாய கடப்பாடாக இவ்விலவச உணவுத் திட்டததைச் சொந்த செலவில் செயல்படுத்தி வருவதாக கூறினார்.மற்ற யாரிடமும் நாங்கள். நிதி உதவி கேட்காவிட்டாலும் ஒரு சில அன்பர்கள் அரிசி போன்ற பொருட்களை வாங்கித் தருகிறார்கள்.அவர்களின் அன்புக்கு மதிப்பளித்து அவற்றையும் எங்களின் இத்திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொள்கிறோம். இதற்கிடையே கோவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் நீங்கி நாடு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் காலத்தில் நோயாளும் முதுமையாளும் மிகவும் பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாமல் அவதிபடுவோர் முப்பது முதல் ஐம்பது பேரை அடையாளம் கண்டு இத்தகைய இலவச உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here