ரயிலுக்கு பின்னால் உள்ள ‘X’ என்ற அடையாளத்திற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?

நாம் அனைவரும் அவ்வப்போது ரயிலில் பயணம் செய்து வருகிறோம். அப்போது ரயிலுக்கு வெளியேயும் உள்ளேயும் பல வகையான அடையாளங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், அதில் ரயிலின் கடைசி பெட்டியின் பின்னால் X என்ற அடையாள இருக்கும், இதற்கு என்ன அர்த்தம் ?

இந்த அடையாளம் இந்தியாவில் இயங்கும் பயணிகள் ரயிலின் முடிவில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். தகவல்களின்படி, இந்த விதி இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்டுள்ளது, அதோடு LV என்றும் பல ரயில்களிலும் எழுதப்பட்டுள்ளது என்பதையும், ரயில்களுக்கு பின்னால் உள்ள சிவப்பு விளக்குகளும் ஒளிரும் என்பதையும் நீங்கள் கவனித்திருக்கலாம்.

ரயிலின் கடைசி பெட்டியில் LV எழுதுவது கடைசி வாகனம் (last box) என்றும் இந்த LV எப்போதும் எக்ஸ் குறியுடன் எழுதப்பட்டிருக்கும். இதுதான் ரயிலின் கடைசி பெட்டி என்பதையும், முழு ரயிலும் சென்றுவிட்டது என்பதையும் ரயில் ஊழியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த குறி வைக்கப்பட்டுள்ளது. இந்த அடையாளம் ஒரு ரயிலில் இல்லை என்றால், ரயில் அவசர நிலையில் உள்ளது என்று பொருள். அல்லது ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here