அறிவியல் புத்தாக்கம் – கண்டுபிடிப்பிற்காக மலேசிய சாதனை புத்தகச் சான்றிதழ் பெற்ற முதல் தமிழ்ப்பள்ளி ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி  

தமிழ்ப்பள்ளிகளின் சாதனை வரிசை ; பதக்கம் -33

கவின்மலர்   

 

1953ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி 37 மாணவர்களையும் ஓர் ஆசிரியரையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான். தேசியவகை ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி. ஜென்ஜாரோம் சீனப்பள்ளியோடு இணைந்து ஒரே ஒரு வகுப்பறையில் தொடங்கப்பட்டது. எலி வளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும் என்பதை தூர நோக்குச் சிந்தனையுடன் சிந்தித்த இப்பள்ளியின அன்றைய பெற்றோர் ஒன்றிணைந்து மறைந்த முத்து மண்டோர்,மறைந்த மாமுண்டி மண்டோர்,மறைந்த அப்துல் ரஹ்மான் ஆகியோரை முன்னிலைப்படுத்தி அவர்களின் அயராத முயற்சியாலும் உழைப்பினாலும் 1.1.1957 ஆம் ஆண்டு இரண்டு வகுப்பறைகளைக் கொண்டு புதிய பள்ளிக்கட்டடம் அமைக்கப்பட்டது.இதில் 49 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர்.1960-ஆம் ஆண்டு மேலும் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பிறகு லண்டஸ்டன் தமிழ்ப்பள்ளியும் தஞ்சோங் டூவா பெலாஸ் தமிழ்ப்பள்ளியும் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியோடு இணைந்தன.மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் மேலும் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன.

 

   

இன்று முழு அரசு பள்ளியாக செயல்படும் இப்பள்ளிக்கு 1996 ஆம்ஆண்டு மூன்று மாடிகளைக் கொண்ட புதிய கட்டடமும் 2002 ஆம் ஆண்டு நூல்நிலையமும் 2004 ஆம் ஆண்டு பாலர் பள்ளியும் நிறுவப்பட்டன. தற்போது இரண்டு பிரதானமான கட்டடங்களில் எட்டு வகுப்பறைகள் , அலுவலகம், ஆசிரியர் அறை, நூல் நிலையம், போதனைக் களஞ்சியமையம், பள்ளி நிகழ்ச்சிகளுக்கான குளிர்சாதன வசதிகொண்ட மண்டபம் ,குறை நீக்க போதனைக்கூடம் , அறிவியல்கூடம், வாழ்வியல் திறன்கூடம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுடன் இப்பள்ளி செயல்படுகிறது. 2009  ஆண்டு அமல்படுத்தப்பட்ட மலேசிய சிறப்புத் திட்டத்தின் கீழ் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளிக்கு நமது முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ முகமது நஜிப் துன் அப்துல் ரசாக் வழங்கிய சிறப்பு மானியத்தின் வாயிலாக ஒரு கூடுதல் பாலர் பள்ளியை விளையாட்டு மைதானத்தோடு அமைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.இக்கட்டடங்கள் அமைவதற்கும், இப்பள்ளி சிறப்பாக செயல்படுவதற்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம், முன்னாள் மானவர் சங்கம் மற்றும் இவ்வாட்டார பொதுமக்களும் பேருதவியை நல்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய சாதனை புத்தகச் சான்றிதழ்

கோலாலங்காட் மாவட்டத்தில் 275 மாணவர்கள், 20 ஆசிரியர்களைக் கொண்டு இயங்கிவரும் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி கடந்த 2015-ஆம்ஆண்டிலிருந்து புத்தாக்கப் பிரிவில்அனைத்துலக அளவில் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி வருவது யாவரும் அறிந்த ஒன்றே.அதுமட்டுமின்றி,அண்மையில் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியைப் பள்ளி உருமாற்றுத் திட்டத்தில் இணைத்ததும் மகிழ்ச்சிக்குரிய மற்றுமொரு வரலாற்றுப் பதிவாகும்.

புத்தாக்கத்தில் கால் பதித்து பல அனைத்துலக நிலையிலான வெற்றிப் பதக்கங்களையும் சிறப்பு வாங்கிக் குவித்துள்ளது ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியின் புத்தாக்கக் குழு மின்கொடியேற்றி, தானியங்கி வெண்பலகை அழிப்பான், சோலார் நீர் குளிரூட்டி, இருமலைப் போக்கும் பொடி, நீர் விரயத்தை தடுக்கும் கருவி, நெகிழி ஆபரணங்கள் போன்ற இன்னும் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கி தொடர் சாதனைகளைப் படைத்து பீடுநடை போடுகிறது.இப்பள்ளியின் சாதனைகளுக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் கடந்த 2.10.2020 புத்தாக்கத்திற்கான மலேசிய சாதனை புத்தக அங்கிகாரம் வழங்கப்பட்டது.

கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்தே பள்ளி நிர்வாகம்,பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளியின் மேலாளர் வாரியம், மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் யாவரும் இணைந்து ஒரே நேர்க்கோட்டில் பயணித்ததன் விளைவாகவே இந்நன்னாள் அமைந்துள்ளது என்றால் அதுமிகையாகாது. பள்ளியின் மேன்மைக் கூறாக புத்தாக்கம் விளங்குவதால் பள்ளி உருமாற்றுத் திட்டத்தில் இணைந்து செயல்படுவது இலகுவாக அமையும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

2015 ஆண்டு நமது ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி தமது முதல் புத்தாக்கமாக மின்கொடியேற்றியை உருவாக்கி தனது பயணத்தைத் தொடங்கி, இன்று வரை பல பொருள்களில் புதுமைகளைச் செய்து சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. மாவட்டம் , மாநிலம், தேசிய மற்றும் அனைத்துலக அளவிலும் வலம் வந்த பெருமை இந்த மின்கொடியேற்றிக்கு உள்ளது. பல பெருமைகளைத் தாங்கி வந்த மின்கொடியேற்றி இன்று மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியதாக அமைகின்றது.

 

 • பள்ளியின் சாதனைப் பயண மைல் கற்களின் பதிவுகள் வருமாறு:-
 • 15 ஜுலை 2015 கோலாலம்பூர், செராஸ் பூப்பந்தாட்ட அரங்கம் சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேச அளவிலான அறிவியல் விழா – புத்தாக்க ரீதியில் முதல் நிலை
 • மே.2017 ஶ்ரீ டாமான்சாரா ஆர்டி பென்கியூட் ஹால் சிலாங்கூர் மற்றும் கூட்டரசுப் பிரதேச அளவிலான அறிவியல் விழா – புத்தாக்க ரீதியில் மூன்றாவது இடம்
 • 11-13 மே 2017 கோலாலம்பூர் மாநாட்டு மையம் ,மலேசியா அனைத்துல அளவிலான புத்தாக்கக் கண்காட்சி ITEX -2017 – தங்கம்\
 • 21-24 செப்டம்பர் 2017 மெர்ச்சு புவானா பல்கலைக்கழகம், ஜாகார்த்தா இந்தோனேசியா அனைத்துலஅளவிலானபுத்தாக்கக்கண்காட்சி IYIA ஜாகார்த்தாஇந்தோனேசியா2017 – தங்கம்
 • 7-11 டிசம்பர் 2017 கோசியோங் இண்டர்நேசியனல் அன்ட் டிசைன் எக்ஸ்போ ,தைவான் தைவான் அனைத்துல அளவிலான புத்தாக்கக் கண்காட்சி  WIPA  2017 – தங்கம்
 • 11-13 மே 2017கோலாலம்பூர் மாநாட்டு மையம் ,மலேசியா அனைத்துல அளவிலான புத்தாக்கக் கண்காட்சி ITEX – தங்கம்
 • 02-04 மே 2018 கோலாலம்பூர் மாநாட்டு மையம் ,மலேசியா அனைத்துல அளவிலான புத்தாக்கக் கண்காட்சி  WYIE (ITEX) – தங்கம்
 • 03-05 ஆகஸ்டு 2018 மலாயா பல்கலைக்கழகம், கோலாலம்பூர் அனைத்துல அளவிலான புத்தாக்கக் கண்காட்சி IRIISE– வெள்ளி
 • 11-14 நவம்பர் 2019 குரோஷியா கண்காட்சி மையம் குரோஷியா நாட்டின் அனைத்துல அளவிலான புத்தாக்கக் கண்காட்சி – தங்கம் and ஈரான் நாட்டின் சிறப்பு விருது
 • 02-04 மே 2019  கோலாலம்பூர் மாநாட்டு மையம் ,மலேசியா அனைத்துல அளவிலான புத்தாக்கக் கண்காட்சி WYIE (ITEX) 2 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம்
 • 10-12 நவம்பர் 2019 மாக்காவ் மாநாட்டு மையம் , ஹோல்டி மாக்காவ் அனைத்துல அளவிலான புத்தாக்கக் கண்காட்சி -1 தங்கம்,1 வெள்ளி தைனான் மற்றும் ஹாங்காங் நாட்டிலிருந்து 2 சிறப்பு விருதுகள்
 • 2 ஏப்ரல் 2019 சமூகக் கல்லூரி பந்திங் கோலா லங்காட் மாவட்ட அளவிலான புத்தாக்கக் கண்காட்சி –

1 முதல்நிலை தங்கம் 1 இரண்டாம் நிலை தங்கம் 2 வெள்ளி

 

தமிழ்மொழி நமது உயிராகட்டும்

தமிழ்ப்பள்ளி நமதுத் தேர்வாகட்டும்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here