இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப் பிரதேசம் உருவான நாள் – ஜன.25-1971

இமாசலப் பிரதேசம்

இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின்  ஓர் ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18-  ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971- இல் அறிவிக்கப்பட்டது.

இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய நகரங்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகின்றன.

இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here