குவைத்தில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தத் தமிழர் இஸ்லாம் தீன்

குவைத்:
குவைத்தில் 400 கிலோ பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் சாதனைத் தமிழர் இஸ்லாம் தீன்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடுதான் இஸ்லாம் தீனின் பூர்வீகம். குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் இவர், ஒரு புகைப்பட கலைஞரும் கூட.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் மீடியா குழு உறுப்பினர். குவைத்தில் முதல் முறையாக ஹெலிகேம் (ட்ரோன் கேமரா) ஒளிப்பதிவுடன் நிகழ்ச்சிகளை படம் பிடித்தவர்.

இதுவரை 360 கிலோவாக இருந்த குவைத் பளு தூக்கும் வரலாற்றை முறியடித்து, 400 கிலோ பளு தூக்கி வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியைத் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தியுள்ள இஸ்லாம் தீன், இதை தனது மனைவிக்கு சமர்ப்பித்து, “மனைவியை காதலியுங்கள், அவர்களின் ஊக்கம் உங்களை பல வெற்றிகளை இறையருளால் ஈட்டிட வைக்கும்” என்றும் கூறியுள்ளார்.

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் உள்ளிட்ட குவைத் தமிழ் அமைப்புகள், பிரபலங்கள் சாதனை படைத்த தமிழருக்கு தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here