குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன. 29) தொடங்க உள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிவகுக்கும் என்று கூறினார்.
பிரச்சினைகள் குறித்த அனைத்து கட்சிகளின் நிலைப்பாடுகளையும் தெரிந்துகொள்ளத் தயார் என்றும், பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.