தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாகட்டும்- டாக்சி‌ ஓட்டுனர் ராஜா

பி.ராமமூர்த்தி .கோலாலிபிஸ்

பெந்தா  ஜன .29 –

இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு இந்தியப் பெற்றோர்கள் முனைப்புக் காட்ட வேண்டும் . குறிப்பாக தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்ற தாரக மந்திரத்தை மனதில் ஒவ்வொரு இந்திய பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளை தமிழ் பள்ளியில் சேர்த்து ‘ தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா என்ற சொல்லுக்கு ஏற்ப நாம் தமிழ் மொழியை வளர்த்து நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க உறுதுணையாக இருப்போம் என்று பெந்தா தோட்ட கே ஆர் டி தலைவர் , சமூகச் சேவையாளர் , வாடகைக்கார் ஓட்டுனர் ராஜா ‘ தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு ‘ எனும் ஸ்டிக்கரை காரில் ஒட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றார்‌. தற்பொழுது பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இந்திய மாணவர்கள் இருப்பதாகவும். இவ்வாண்டு 8 மாணவர்கள் முதலாம் ஆண்டில் கல்வி பதிவு செய்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here