பிரதமர் மோடி தமிழகம் வருகை

சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அரசு முறை திட்டங்களை திறந்து தொடங்கி வைப்பதற்கு வரவேண்டும் என்ற அழைப்பிதழை நேரடியாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிரதமர் அலுவலகம் பிரதமர் மோடி தமிழகம் வருகையை உறுதி செய்துள்ளது.

அதன்படி, பிரதமர் மோடி வருகையின் போது வண்ணாரப்பேட்டை – விம்கோநகர் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காகவும், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிப்ரவரி 14-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வர திட்டமிட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்குத் தள்ர்வுக்குப் பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக தமிழகம் வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here