யாமறிந்த பள்ளிகளிலே ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி போல் யாங்கனுமே கண்டதில்லை

கவின்மலர்   

யாமறிந்த பள்ளியிலே….ஜோகூர் பாரு மாநகரில் அமைந்துள்ள ஒரே பள்ளியான ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி போல் யாங்கனும் கண்டதில்லை என்று சொல்லும் அளவிற்கு  இப்பள்ளி நமது மொழி, கலை, கலாச்சாரம், சமயத்தைக் கட்டிக்  காக்கும் ஒரு நடுவமாகவும் ஜோகூர் மாநிலத்தில் நமது இனத்தின் ஓர் அடையாளச் சின்னமாகவும் திகழ்கிறது என்று சொன்னால் மிகையாகாது.இப்பள்ளியில் படித்த  மாணவர்களில் பலர் இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளனர். அறிவியல் போட்டிகளில் இப்பள்ளிபெற்ற வெற்றிகள் எண்ணிலடங்கா இப்பள்ளியின் புத்தாக்கச் சாதனைகள் சொல்லியோ எழுதியோமாளாது.   

ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி பள்ளி பாடங்களுடன் புறப்பாடங்களிலும் சாதனைக்கு மேல் சாதனைகளைப் படைத்து தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் தமிழ்ப்பள்ளியாகத் திகழ்கிறது ஓர் அழகான சுற்றுச் சூழலைக் கொண்டுள்ள இப்பள்ளி 1972 ஆம் ஆண்டு 471 மாணவர்களையும் 17 ஆசிரியர்களையும் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பள்ளியாகும். கால ஓட்டத்தில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்ட இப்பள்ளி தற்போது தலைமையாசிரியர் ஜெகநாதன் செல்வராஜு தலைமையில் 817 மாணவர்களையும் 49 ஆசிரியர்களையும் , 5 அலுவல் பணியாளர்களையும் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கல்வி கேள்விகளில் குறிப்பாக யூபிஎஸ்ஆர் தேர்வில் மாணவர்களின் நனிசிறந்த தேர்ச்சியும், பாடங்களின் முழுத் தேர்ச்சியும் வளர்ச்சியும் இப்பள்ளியின் சிறப்புகளில் ஒன்றாகும். கடந்த ஆண்டு ஆறாம் ஆண்டு மாணவர்களின் பள்ளி சார்ந்த அடைவு நிலையும் முன்னைய ஆண்டுகளின் அடைவும் அதற்குச் சான்று பகர்கின்றன.

 

ஆண்டு/ அடைவு 2019 2018 2017
8A

7A

6A

8

2

4

 

2

4

2

8

5

6

100% அடைவு அறிவியல் அறிவியல்

ஆங்கிலம்

அறிவியல்

 

இன்று தேசிய நிலையிலும், அனைத்துலக நிலையிலும் புகழ் பெற்று விளங்கும் தமிழ்ப்பள்ளிகளில் முன்னோடியாக ஜாலான் யஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.

2009ஆம் ஆண்டு தொடங்கிய இந்த அறிவியல் பயணத்தில்,2011 ஆம் ஆண்டு புத்தாகம் மற்றும் ஆய்வுக் கட்டுரைப் படைப்பிலும் வெற்றியை ஈட்டியது.2014 ஆம் ஆண்டு மாநில அளவிலான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் போட்டியில் இரண்டாம் நிலையிலும் தேசிய அளவிலான போட்டியில் முதல் நிலையிலும் வெற்றிக் கண்டது.ஏறக்குறைய 2009ல் தொடங்கிய இந்த அறிவியல் பயணத்தின் முத்தாய்ப்பாக ITEX எனப்படும் ஆசிய அளவிலான புத்தாக்கப் போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் தங்கப் பதக்கமும், ஆசிய அளவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று புத்தாக்கப் பாதைக்கு வித்திட்டனர் 2014ஆம் ஆண்டு. ஒரே நீர்ப்புட்டியில் இரு விதமான சுவைபானங்களை எடுத்துச் செல்லும் நீர்ப்புட்டியைத் தயாரித்து சாதனையை ஏற்படுத்தினர்.

மாணவர்களிடையே இலைமறைக் காயாக இருந்த திறன்களை அடையாளம் கண்டு வெளிடுத்த முயன்ற போது உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புத்தாக்கப் படைப்பாற்றல் சார்ந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று சாதனைகளைக் குவிக்கத் தொடங்கினர்.2015 ஆம் ஆண்டு, 9 மாணவர்கள் தென் கொரியாவில் நடைபெற்ற அனைத்துலக கண்டுப்பிடிப்புப் போட்டியில் கலந்து கொண்டு மூன்று தங்கப்பதக்கங்களையும் 3 நனிசிறந்த விருதுகளையும் வென்று தமிழ்ப்பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமையை ஈட்டித் தந்தனர்.2016ல் ஹெர்பின், சீனாவிற்குச் சென்றது. பின், கனடாவிலும் 2017ல் தைவான் பின் பேங்கோக் என இப்பள்ளியின் புத்தாக்கங்கள் உலக அரங்கில்  சாதனைகளை ஏற்படுத்தி பெருமைக் கொள்ளச் செய்தன.

ஏட்டுக் கல்வியோடு அனுபவ அணுகுமுறைகளும் தேவை என்பது உள்நாட்டு வெளிநாட்டு அறிவியல்,புத்தாக்கப் போட்டிகளில் பங்கேற்பது பெரும் பங்காற்றுகிறது.இதனை மாணவர்களின் ஈடுபாட்டின் வழி காண முடிந்தது.இதன் வழி பல நன்மைகளை மாணவர்கள் அடைகின்றனர் என்பது மிகையாகாது. அறிவியல் புத்தாக்க துறையில் பொருளாக்கம், பொருள் உருமாற்றம், ,உருவமைப்பு , புதிய சிந்தனை, மாற்று சிந்தனை போன்றவற்றை அறிந்துகொள்ளவும், புதிய அறிவியல் தொழில் நுட்பங்களைக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கவும், புதிய உத்வேகத்தையும், தூண்டுதலையும் இந்த அறிவியல் புத்தாக்கப் பயணம் அமைத்து கொடுத்துள்ளது. பன்னாட்டு அறிவியலாளருடனும், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுடனான உரையாடல்களும், அவர்களின் சிந்தனைகள், புத்தாக்கங்கள், கலை கலாச்சாரங்களையும் நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு இந்த இள வயதிலேயே மாணவர்களுக்குக் கிடைக்கின்றது.

ஸ்டேம் எனப்படும் அறிவியல் தொழில் நுட்பம்,பொறியியல்,கணிதம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படும்

வகுப்பை உருவாக்கி நாட்டில் தமிழ்ப்பள்ளிகளின் அது தொடர்பான பாட பயிற்சி முறையை ஏற்படுத்தியதன் மூலம் நாட்டின்முன்னோடி தமிழ்ப்பள்ளியாகத் திகழ்வதோடு கடந்த 5 ஆண்டுகளாக பலமாணவர்களை இந்த ஸ்டேம் தொடர்பான செயல் முறை போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்குவித்துள்ளது பெருமை குறியதாகும். சாதனை ஒரு புறம் இருக்க, அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், கணிதம், புத்தாக்கம் என பல துறைகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டேம் அனைத்துலக சாதனைகள்

பதக்கம் / ஆண்டு 2020 2019 2018 2017
தங்கம் 16 12 9 4
வெள்ளி 8 13 5 4
வெண்கலம் 12 5 6 10
மொத்தம் 36 30 20 18

 

“பள்ளிப்பருவத்தில் நான் எந்த மேடையும் ஏறியதில்லை; பரிசுகளோ, கைத்தட்டல்களோ வாங்கியதில்லை” என்று சொல்லும் மாணவர்களின் எண்ணிக்கையே இங்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு இப்பள்ளியில் அதன் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்பது மிகையாகாது. மாணவர்களுடன் ஆசிரியர்களுக்கும் இப்போது வரை 30க்கும் மேற்பட்ட மேடைகளில் ஏறும் வாய்ப்பினையும் இந்த அறிவியல் புத்தாக்கப் பயணங்கள் ஏற்படுத்தி தந்திருப்பது பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு சிறப்பாகும்.அதன் காரணமாக தொலை தூரத்தில் இருக்கும் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளைப் இப்பள்ளியில் சேர்க்க நாட்டம் காட்டுகின்றனர் இதன் வழி இன்னும் ஊக்கத்துடன் உழைக்கும் உற்சாகம் ஆசிரியர்களுக்கு உருவாகிறது என்பதே மகிழ்வான உண்மையாகும்.

மேலும் ,சமயம், பண்பாடு, கலை கலாச்சாரப் பண்புகளை வளர்க்கும் ஒரு பள்ளி என்றால் அதுமிகையாகாது. பல பண்பாடு நடனங்களைப் படைப்பது இப்பள்ளி மாணவர்களின் தனிச் சிறப்பு.ஜொகூர் மாநில அளவில் நடைபெற்ற (Festival Tari Rakyat Negeri Johor) எனும் நடனப்போட்டியில் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகி 3ஆம் நிலை வெற்றியாளர்களாக வாகை சூடினர் . அதோடு ஒவ்வொரு ஆண்டும் (Persatuan Cerebral Palsy Johor )நடத்தும் தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கரகாட்டம், மயிலாட்டம்,கிராமியம் சார்ந்த பல்வேறு நடனங்களை ஆடி பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளனர் சுற்று வட்டார பள்ளிகளில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளிலும் ( JemputanKhas) தங்களது நடனங்களை வழங்கியுள்ளனர். தவிர்த்து, ஜாலான் யாஹ்யா தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  2017 – 2019 ஆம் ஆண்டு  மாநில அளவில் நடைபெற்றஇந்திய பாரம்பரிய  இசைக் கருவிகள் இசைத்தல் போட்டியில் பங்கேற்று மூன்றாம் பரிசை வாகை சூடினர் இன்று நாடு போற்றும் அளவிற்கு நற்பெயரைக் கொண்டிருக்கும்

அறிவியல் சிந்தனைகளையும் அனுபவங்களையும் ஒரு வட்டத்திற்குள் வைத்திராது வையகம் போற்ற பல இடங்களில் பயன்படுத்தி அசத்தி வருகின்றனர் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி மாணவர்கள். தற்போது இப்பள்ளி உருமாற்றுப் பள்ளி 2025 திட்டத்தின் கீழ் செயலாக்கம் கண்டு வருகிறது.அதன்வழி, இப்பயணங்களும் சாதனைகளும் வரும் ஆண்டுகளிலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக! இப்பள்ளியின் வளர்ச்சியில் பங்குக் கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளிவாரியக் குழு உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் என அனைவருக்கும் இப்பள்ளியின் சாதனையில் பங்கு உண்டு என்பது மேலும் குறிப்பிடத்தக்கது

தமிழ்மொழி நமது உயிராகட்டும்

தமிழ்ப்பள்ளி நமதுத் தேர்வாகட்டும்

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here