புக்கிட் கிளேடேக், அதரட்டன், லாபு 4,  நகர்ப்புற பள்ளிகளாக இடமாறுமா?

நாகேந்திரன் வேலாயுதம்
சிரம்பான், பிப்.2-
நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள 61 தமிழ்ப்பள்ளிகளின் முதலாம் ஆண்டுக்கான மொத்த மாணவர்கள் எண்ணிக்கை ஏற்றம் கண்டப்போதிலும், இங்குள்ள தோட்டப்புறம் தமிழ்ப்பள்ளிகளில் அந்த எண்ணிக்கை பெரும் சரிவை ஏற்படுத்திவுள்ளது.
வசதியான கம்பீரமான தோற்றத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகளில் அந்த எண்ணிக்கை அதிகரித்து புதிய வரலாற்றை பதிவு செய்துள்ள வேளையில், இங்குள்ள பெரும்பாலான தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில், குறிப்பாக புக்கிட் கிளேடேக், அதர்ட்டன், லாபு பிரிவு 4 ஆகிய தோட்டப் பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே முதலாம் ஆண்டில் பயில பதிவு செய்துக்கொண்டுள்ளார்கள்.
இந்த சரிவிலிருந்து தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்றுவது அல்லது மாற்று சிந்தனையில் அப்பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து தமிழ்ப்பள்ளிகளில் பயின்று தங்கள் பிள்ளைகளையும் தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்பு, நாட்டில் ஒரு முன்னுதரணமான தமிழ் ஆர்வாளர்களான இந்திய பெற்றோர்களாக திகழும் சிலருடன் மக்கள் ஓசைக்காக சந்தித்தப்போது.
முனைவர் டாக்டர் பழனி முத்துசாமி மலேசிய இந்திய பட்டதாரிகள் சங்கத் தலைவருமான முனைவர் டாக்டர் பழனி முத்துசாமி, தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததின் காரணம், கல்வி தரம் அல்ல, தோட்டங்களில் இந்திய தோட்டத் தொழிலாளர்கள் தற்போது குறைந்து விட்டார்கள் என்பதால் ஆகும்.
அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை பயின்ற அப்பள்ளியின் நடப்பு மேலாளர் வாரியக் குழுவின் தலைவருமான அவர், தோட்டப் பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், அதன் கற்றல் கல்வி் மிக சிறப்பாக உள்ளதை முதலில் இந்திய பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
குறிப்பாக நகரப்புறம் மற்றும் தோட்டப்புறம் ஆகிய தமிழப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தலை போதிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நிலையில் உள்ள கல்வி பட்டதாரிகள் ஆசிரியர்கள் ஆவார்கள். அவர்கள் போதிக்கும் கல்வி ஒரே மாதிரியாகதான் இருக்கும்.
நகர்ப்புற தமிழ்ப்பள்ளிகள் காட்டிலும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள தோட்டப் பள்ளிகளில், கற்றல் கற்பித்தலை ஆர்பாட்டமின்றி கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
மிகவும் சத்தமான சூழலில், நிம்மதியாக படிக்க முடியாத நிலையிலும், படிக்கும் வசதிகள் குறைவான சூழலில், ஓடி ஆடி விளையாடி மகிழ்ச்சியாக படிக்கும் சிறப்பான சுற்று சூழலை தோட்டப் பள்ளிகள் கொண்டிருக்கிறது என ஆயிரக் கணக்காண இந்திய பட்டதாரிகளை நெகிரி செம்பிலானில் உருவாக்கிய சாதனையாளருமான பழனி அவ்வாறு கூறினார்.
எனவே 5 கிலோ மீட்டர் தொலைவில் உட்பகுதியில் அமைந்திருக்கும் தோட்டத் தமிழ்ப்பள்ளிகளின் அச்சூழலை பெரிது படுத்தாமல், நகர்ப்புறங்களில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க ஆர்வம் காட்டும் பெற்றோர்கள், தங்களின் அம்முடிவை சீர்தூக்கி பார்க்க வேண்டும்.
இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து நிலைத்திருப்பதை முடிவு செய்யும் இடத்தில் இருப்பவர்கள் இந்திய பெற்றோர்கள். மாணவர்கள் குறைவால் மூடும் அபாயக்கட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் அப்பேரபத்திலிருந்து காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இந்திய பெற்றோர் கையில் உள்ளது.
நகர்ப்புறத் தமிழ்ப்பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களில்் சிறிய எண்ணிக்கையில் ஆனவர்கள், கண்ணுக்கு எட்டும் தூரத்தில் உள்ள தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்கலாம்.
அதேப் போன்று அருகில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாத சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகளை மலாய் மற்றும் சீனப் பபள்ளிகளில் பதிவு செய்து கொண்டுள்ள இந்திய பெற்றோர்கள், தமிழுக்கு ஆதரவாக தங்கள் இருப்பிடத்திற்கு தூரமாக இருந்தாலும், தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பும் சிந்தனை மாற்றத்தை கொண்டருந்தால் போதும், தோட்டத் தமிழ்ப்பள்ளிகளில் சரிந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கோபுரத்தின் உச்சத்தில் ஏற்றலாம்.
டத்தோ சுரேஸ் ராஜா அவரை தொடர்ந்து சங்காய் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தனது தொடக்க கல்வியை பயின்று இன்று வர்த்தகத் துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிரபல இளம் தொழில் அதிபர் டத்தோ சுரேஸ் ராஜா, தோட்டத் தமிழ்ப்பள்ளிகள் இன்றைய சூழலில், அங்குள்ள தலைமையாசிரியர்கள், பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளி மேலாளர் வாரியக்குழு ஆகிய தரப்பினரின் முயற்சியால் தோட்டப் பள்ளிகள் இன்று பூந்தோட்ட பள்ளிகளாக அழகுடன் உருமாற்றம் கண்டுள்ளது, உடன் வசதியும் கூடிவுள்ளது.
ஆனால் ஒரே குறை மாணவர்களின் எண்ணிக்கை குறந்ததுதான். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க பள்ளியை சார்ந்த அணைத்து தரப்பினரும் பல்வேறு நிலையில் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்பது பாரட்டக்குறியது.
ஆனால் பெரும்பாலன பெற்றோர்களின் சிந்தனை மாறவில்லை என்பதுதான் உண்மையான நிலை, பள்ளியின் தோற்றத்தை வைத்து அதன் கற்றல் கற்பித்தலின் தரத்தை எடைப்போடுவது. ஒரே மாதிரியான கல்வி கொள்கை எப்படி மாறும் என்பதை பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்த சிந்தனை மாற்றத்தை நம் இந்திய சமுதாயத்தில் கொண்டு வருவது என்பது எளிதான காரியமல்ல என கூறும் சுரேஸ், அதற்கு ஒரே வழி வீடமைப்பு மேம்பாடு திட்டம் இல்லாத உட்பகுதியில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை நகர்ப்புறத்திற்கு குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதே சாலச்சிறந்த முடிவாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எம.கே.ஜெயராமன் இந்த இரு மாறுப்பட்ட கருத்தையும் வரவேற்று பேசிய சமுக சேவையாளர் வணிகர் எம்.கே.ஜெயராமன், தமிழ்ப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க காலத்துக்கேற்ற உருமாற்றம் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இந்திய சமுதாயம் மத்தியில் அவசியமாகிவுள்ளது.
அதே வேளை கடந்த அரசியல்களில் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, அரசாங்கத்தில் அதிகார ஆட்சியில் பதவிகளை அழங்கரித்து கொண்டிருக்கும் இந்திய அரசியல் தலைவர்கள், தமிழ்ப்பள்ளி வளர்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி முதன்மை திட்டம் ஒன்றை வகுத்து, அதன் வழி செயல்முறை நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
இந்திய சமுதாயத்தின் கல்வி, கலாச்சாரம், சமயம் மற்றும் பொருளாதாரம் என்பது ஒரு கையில் எழுப்பும் ஓசையல்ல, பல கைகள் ஒன்றிணைந்து எழுப்பும் ஓசை என்பதை உணர்ந்து, ஒற்றுமையாக செயல்படுவோம் என ஜெயராமன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here