ஜெயம் நம்நாடு சமூகநல இயக்கம் ஏற்பாட்டில் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன

காஜாங்-
நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்படி
பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டுதோறும் பள்ளி சீருடைகளை வழங்கும் நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டு வந்தத இந்நிகழச்சி இவ்வாண்டு கோவிட் தொற்றின் காரணமாக இவ்வாண்டு மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களைப் படித்து வருகின்றனர்.
இதற்கு மாற்று வழியாக பள்ளி மாணவர்களுக்கு  உபகரணபொருட்கள் வழங்கியதாக இதன்  எற்பாட்டாளர்களான ஜெயம் நம்நாடு சமூக நல இயக்கத்தினர் கூறினர்.
இதனையடுத்து தெலுக் பங்லிமா காராங், பூலாவ் கேரி தமிழ்ப பள்ளிகளில் பயிலும் 50 வசதிக்குறைந்த மாணவர்களுக்கு  புத்தகங்கள், புத்தகப்பை, பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மேலும் ஜெயம் நம்நாடு சமூகநல இயக்கப் பொறுப்பாளர்கள் இணைந்து 10 பள்ளிகளைத் தத்தெடுத்து சுமார் 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான தன்முனைப்பு பட்டறைகள், பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கோலாலம்பூர் , சிலாங்கூர் மாநில ஜெயம் நம்நாடு சமூகநல  இயக்கத்தின் தலைவர் டாக்டர் குமரேந்திரன் பாலகிருஷ்ணன் கூறினார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here